மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-140
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
பெண்கள்-நாடகத்தில் பங்கேற்பதா என்கிற நிலை-பிறகு-அதுவே மாறி பெண்களும் பங்கேற்கிற நிலைமை வந்தது.
பெண்கள் மேடைக்கு வந்த பிறகும் கூட-சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட இனத்துப் பெண்களே -பங்கேற்கலாம். உயர்ந்தோர்-உப்பரிகை வாசிகள்-நடிப்பது பாவம் என்கிற நிலை இருந்தது.
பிறகு நாடகம் சினிமாவாகிறபோது-சமுதாயத்தில் மேம்படுத்தப்பட்ட மேல் வீட்டுக்காரிகளே -நடிப்பதற்கு முன் வந்தனர்.
சினிமாத்துறை கொண்டு வந்த புகழ்-பொருள் இவை மாத்திரம் இந்த மாற்றத்திற்குக் காரணமில்லை.
இதற்கும் அப்பால் மாறிவந்த சமுதாயத்தின்-மாற்றங்கள் கலைத்துறையில் மாறுதல்களை விதைத்தன.
ஆக ஒரு காலத்தில் பொழுது போக்கிற்காக மாத்திரமே வளர்ந்த கலை அழுதும்-தொழுதும் படித்தாக வேண்டிய கொள்கை-கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டே நிமிர்ந்தது.
முதலில் பெண்கள் பங்கேற்கலாகாது-பிறகு இந்த இனங்கள் பங்கேற்கக் கூடாது-என்றிருந்த நிலை மாறி-நடிகர்களுக்கு-வலுவான விரிந்து-பரந்த “சினிமா” என்கிற கருத்து பரப்பி கைவசம் இருந்ததால் சமுதாயத்தில் செல்வாக்கு வளர்ந்தது.
ஆகவே, கலை இத்தனை தடைக் கற்களை உடைத்து- படிக்கட்டுக்களைத் தாண்டி-நடை போட்ட பிறகு ஒரு நடிகரை வெறுக்கிறோம் என்று வெட்கமில்லாமல் சொல்லுகிறவர்கள் காலக் கடிகாரத்தின் கை காட்டி முட்களைப் பின்னுக்கு இழுப்பதால்-நேரம் நின்றுபோகும்; நாட்கள் நகராது என்று நினைக்கிற நடப்பறியாத சிறுவர்கள்.

Add a Comment