மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-143
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
இது அவர்களது அறியாமை அல்ல. ஆற்றாமை! ஆற்றாமை!!
சிலர் திரைப்படத்தில் குரல் கொடுத்தல் – படத்தின் தொடக்கத்தில் தானே நின்று பேசுதல் – இவற்றிற்கு ஆழமான காரணங்களுண்டு.
இவைகள் தன்னை முன்னிறுத்திப் பார்க்கிற முயற்சிகள் மாத்திரமல்ல – மக்கள் மனத்தில் தன்னை நிறுத்த முனைகிற வேடிக்கை நிகழ்ச்சிகளும் ஆகும்.
நாம் எழுதிய – கதையால் வடித்த வசனத் தால் படம் நின்றது-வென்றது என்று நினைக்க எழுதுவோருக்கு உரிமை உண்டு. அதை நம்புவதுதான் சிலவேளைகளில் நட்டாற்றில் விட்டு விடும்.
எழுதுகிறவர்க்கும் – அதற்கு உயிர் கொடுத்து நடிக்கிற ஒருவருக்கும் வேறுபாடு உண்டு தானே!
கண்ணுக்குள் நிற்கிறவர் நடிப்பவர் – கருத்துக்குள் இனிப்பர் எழுதுபவர்.
புரட்சித் தலைவரைப் பொருத்தவரை – அவர் திரைக்கு அப்பாலும் – வளர்ச்சி பெற்ற – வாகான மக்கள் தலைவர் – ஆதலால் கண்ணுக்குள் நிற்பவரே கருத்திலும் இனிக்கிறார்.
அவர்களுக்கு வருகிற அடிப்படைக் கோபமே இங்கேதான் தொடங்குகிறது.

Add a Comment