திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
=====================================
பாடல் – 18
==========
எழுப்ப வந்தவர்கள் முதலில் வாயில் காப்போன் முதலாக – நந்தகோபர், யசோதைப் பிராட்டி. பலதேவன் எல்லோரையும் எழுப்பி கண்ணனையும் உம்பர்கோமானே ! உறங்காதுஎழுந்திராய்“ என்று வேண்டினார்கள்இல்லையா? இந்நேர்த்தி எல்லாம் பட்டும் பலனில்லை ஆயிற்று. பின்னர் அவர்கட்கு எழுப்பியதில் முறை தவறுதல் புலப்பட்டது. கண்ணன் பால் எழுந்த பிரேமாதியேத்தாலே அவன்பால் முன்னர் இழிந்தது தகாது என்றே தோற்றிற்று. எம்பெருமானைச் சரணம் புகுந்து வேண்டுவார் முன்னர் பிராட்டியின் புருஷகாரம் பெற்று. பின்னர் இருவருமான சேர்த்தியிலேயே விண்ணப்பிக்கவேணும் – என்பது உரிய நெறிமுறை ஆகும். பெருமானை ஒழியப் பிராட்டியைப் பிரித்த இராவணனும் சீதையை அநாதரித்து துறையறியாமல் இராமனைப் பற்றிய சூர்ப்பனகையும் – கேடுற்றார்கள். இருவரையும் சேரப்பற்றிய வீடணன் அல்ல்ல் தீர்ந்து உய்ந்து போனான். மாசதிர் இது பெற்று நம்முடை வாழ்பு வாய்க்கின்றவர் என்று பாசுரம். கர்ம ஞான பக்திகளால் அவனை அடைகிறோம் என்பது இளிம்பு. அவனருளாலேயே அவளைப் பெறுகிறோம் என்பது சதிர். அதற்கு அடியான பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெறுகை என்பது மாசதிர். ஆகவே, கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பாமல் தன்னை எழுப்பியது குறை என்று கருதித் தானோ என்னவோ எழுவில்லை என்று கருதும் அவர்கள். வழியே போகவேண்டு இப்பாசுரத்தால் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்.
இவர்கள் வந்தபோது கண்ணனும் நப்பின்னையும் துயில் எழுப்ப வேண்டிய நிலையில் இல்லை. எழுந்து, பந்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரம். அப்போது நப்பின்னை ஆட்டத்தில் வென்று கண்ணன் தோற்றிருக்கிறான். தோல்வியுற்றவன் நான் ஆடமாட்டேன் என்று மறுக்க நப்பின்னை அவனை வற்புறுத்தி திருப்பி ஆட அழைக்கிறாள். பந்து ஒரு கையிலும் கண்ணன் மற்றொரு கையிலுமாக அவள் பிடித்திருந்த காட்சியைச் சாளரத்தில் வழியே வந்தவர்கள் கண்டார்கள். ஒரு கையில் பந்தனைத் தாங்கி அவனோடு சேர்த்து மீண்டும் ஆட வைக்கும் நப்பின்னையின் செயல் அவளது புருஷகார வைபவத்தினை நினைப்பூட்டியது. தங்களையும் கண்ணனோடு சேர்த்து வைக்க அவளுதவி நாடி வந்திருப்பவர்கள் தாமே! இதனை நல்லது காட்டும் குறியாகவே நினைத்து பந்தார்விரவி‘ என்று அழைக்கிறார்கள். எங்களையும் கண்ணனோடு கூட்டிவைக்க உதவு என்பது கருத்து. நாங்கள் அறிவுடைப் பிறவிகளாகப் பிறந்து என்ன பயன்? அறிவற்ற பந்தாய் உரு வெடுத்திருந்தால் கூட உன் கையில் பட்டு அவனைக் கூடப் பெறுவோமே“ என்று ஏக்கத்துடன் கூறியதாகவும் ஆகும். பந்து பொருந்திய கையை உடையவனே என்பதற்கு, இவ்விருவகையிலும பொருள் கொள்ளுதல் ஏற்கும்.
நீங்கள் வந்த காரணம் என்ன, நான் என்ன செய்ய வேணும் என்று நப்பின்னை கேட்க, வந்தவர்கள் சொல்லுகிறார்கள். “உன் மைத்துன்ன் பேர்பாட“ என்று! பந்தாடுகையில் இரு சாரார் மட்டும் போராது மூன்றாமவர்களும் ஆட்டத்தின்போது அருகிருக்க வேணும். வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி நிற்க ஒரு கட்சியும், தோற்றவர்களை மறுமுறை வெல்லலாம் என ஊக்குவிக்க மறுகட்சியும் தேவை. அம்முறையிலே நீயும் அவனும் மைத்துனமையாடி ஒருவருக்கு ஒருவர் ஒன்று பத்தாக்கிக் கேலி பேசுவீர்கள். அப்போது உன் பக்கலிலே நாங்கள் நின்று அவன் தோல்விக்கு வசை பாடவேணும். உன் வெற்றிக்குப் புகழ்பாடி உதவவே வந்தோம். வாயிற்கடையைத் திறந்து விடுவாயாக“ என்று. அங்ஙனமாகில், நீங்களே திறந்துகொண்டு புகுருங்கோள் என்முன் நப்பின்னைப் பிராட்டி.
அதற்கு, எங்களாலே பேறு என்று இருக்குமவர் இல்லை நாங்கள். பேற்றுக்கு உன் கையை அல்லவோ எதிர்பார்த்து இருக்கிறோம். பந்து பிடித்துச்சி வந்திருக்கிற கையால் நீயே வந்து திறக்க வேணும் என்கிறார்கள். செந்தாமரைக்கையால் வந்து திற“ என்று! செந்தாமரை அழகு குளிர்ச்சி மென்மை இவற்றுக்கு உவமை. கண்ணனது அணி மிகும் தாமரைக்கை. என்றால், இவளது செந்தாமரைக்கை. அவனும் ஆசைப்படும் கை இவளது என்றபடி. தனது கைமேல் என் கை வைத்து“ என்று ஆண்டாள் பாசுரம். சரண்புகுந்தாரை நோச்சி நீங்கள் பண்ணின பாவத்துக்கு அஞ்சவேண்டாம் என்கிறது பெருமானது கை. பிராட்டியது, கையோ ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு நீங்கள் அஞ்சாவேண்டாம். நான் இருக்கிறேன் என்று சொல்லுகிறதாம். கண்ணனைக் கூடவேண்டும் என்று ஆசையோடு வந்த எங்களது அச்சந்தவிர்த்து ஆட் கொள்ள வேணும் என்று வேண்டுகிறார்கள். இதனால்!
இவர்கள் வருத்தம் கண்டு, ளையோசை செவிப்படலாகது என்று கருதி நப்பின்னை தன்முன் கைவளையை மேலேற்றிக் கொண்டு திறக்கப்புக்களாள். அது கண்டு வந்தவர்கள் – சீரார் வளை ஒலிப்பவந்து திறவாய்“ என்கிறார்கள். பெருமை பொருந்தியவளை சீரார்வளை, பசியுள்ளவள் சோற்றை வருணிப்பது போல வளையையும் அதன் ஒலியையும் கொண்டாடுகிறார்கள். வளைக்குப் பெருமை கணவனது பிரிவுத் துன்பம் அறியாதது. பிரிவில் பெண்களுக்கு உடல் மெலிவால் வளைகள் கழலும். நப்பின்னைக்கோ அப்படியில்லை. கண்ணனது இருப்பு எப்போதும் உண்டு. ஆகவே, வளை கழலாது எப்போதும் முன் கையிலோ தங்கும். “சங்கு தங்கும் முன் கை நங்கை“ என்று பாசுரம் கண்ணனும் நீ திறக்கும் போது வளையோசை கேட்டு மகிழவேணும். நாங்களும் வளை ஒலி கேட்டு வாழவேணும். அப்படி, சீரார் வளை ஒலிப்ப வந்து திற என்கிறார்கள்.
கண்ணனோடு கூடியிணுருப்பதற்குத் தடையாகுமே போய்த் திறப்பது என்று இருந்தபடியே இருந்து திறக்கப்புக்காள் நப்பின்னை, அது கண்டு வந்தவர்கள் சொல்லுகிறார்கள். “வந்து திற. மகிழ்ந்து திற“ என்று! நீ இருந்தபடி இருந்து திறத்தல் ஆகாது. எங்களுக்காக நாலடி நடந்தாய் என்று பேறு பெற வேண்டும் நாங்கள்! நாலடி போய் வந்தாவது திறக்கவேணும். உன் தன் நடையழகு கண்டு கண்ணனோடு நாங்களும் மகிழவேணும். கண்ணனிடம் காட்டும் அன்பினைக் காட்டிலும் உன் அடியாரிடம் பேரன்பு கொண்டவள் நீ. அந்த முகப்பொலிவு காணும்படி திறக்கவேணும். “ஆசையுடையோர் வாசலில் வந்து வருந்தி நிற்க. உள்ளே நமக்கு வேறு என்ன அலுவல்‘ என்று, தருமத்துக்குத் திறத்தல் தகாது. பேறு உன்னது ஆக்கிக் கொண்டு திறக்க வேணும். எங்களது மார்கழி நோன்புக்கு உன் மகிழ்ச்சி காணுவதே மேலான பலன் அது கிடைக்குமாறு உகந்து வந்து திற“ என்பன எல்லாம்“ வந்து திறவாய் மகிழ்ந்து“ என்பதற்கு உள்ளுறையாகும்.
இந்தப் பாட்டு எம்பெருமானார் மிகவும் உகந்ததொரு பாட்டு என்பர். எம்பெருமானார் என்றது இராமாநுசருக்கு மறுபெயர். அவர் துறவு நிலைக்கேற்ப தினமும் மனைதோறும் சென்று “பிக்ஷை‘ ஏற்பதுண்டு. அப்பொழுது எல்லாம் திருப்பாவைப் பாசுரங்களை ஓதிக்கொண்டே செல்வது பழக்கம். பெரிய நம்பி அவருக்கு ஆசாரியர் ஒரு நாள் அவர் திருமாளிகைக்குப் போகும்போது தன்னடைவே இந்தப் பாசுரம் சொல்ல நேர்ந்தது. அதில், செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்“ என்ற பகுதி வரும்போது மூடியிருந்த கதவைத் திறந்துகொண்டு வந்தாள் பெரிய நம்பிகள் குமாரத்தி. அவள் பெயர் அத்துழாய் என்பதாகும். வந்தவள், வளை ஒலிகேட்குமாறு நடந்துவந்து அவருக்குப் பிக்ஷையிட்டாள். கண்ட எம்பெருமானார் – இவளை நப்பின்னைப் பரிட்டியாகவே கொண்டு மயங்கி மூர்ச்சையானார். விவரம் அறிந்த பெரிய நம்பிகளும் – “இனி நீ உந்து மத களிற்றன் “ஆகாதே என்று அவளிடம் சொல்லியமர்ந்தாராம். இந்த ஐதிகத்தினை நாம் இங்கு மறவாது நினைக்க வேண்டியதுண்டு. மிகவும் சுவையான செய்தி இது.
“கோதைத்தமிழ் என்பது திருப்பாவை நூல். அதில் முப்பது பாசுரங்களுண்டு. எல்லோரும தெரிந்து நாள்தோறும் சொல்ல வெண்டியது இது. இதை அறியாதவர்கள் பூமிக்கு பெறும் பாரம் போல்வர். இப்படி இதன் பெருமை குறித்த கருத்து ஒன்றுண்டு. இருந்த போதிலும் வெறும் மனப்பாடம் ஆக்கி இதனை ஒப்புவித்தல் காணாது நல்ல பொருள் அறியும் பாவனைன முதிர்ச்சியும் படிப்போருக்கு வேண்டும். அப்படிப் பட்டவர்களே பரவசமுற்றுப் பேரின்பம் உறுவர் என்றும் பேருண்ணையினை இவ்வரலாறு சுட்டும் சிறந்த பொருளுணர்ச்சியும் பாவனா முதிர்ச்சியும் பெற்று ஆண்டாளோடு ஆண்டாளாய் நாமும் மனங்கலந்து பாடினால் மட்டுமே போதிய பயன்தரும். இது கருதியே “திருப்பாவை சொல்லவ்வோ அன்றி அதனைக் கேட்கவோ ஆள் கிடைப்பது அருமையிலும் அருமை. அவளே சொல்லி அவளே கேட்க வேண்டும் இத்தனை‘ என்று மேலோர் பணிப்பதுண்டு.
இதற்கு முன்னர் நப்பின்னையை எழுப்பும் போது வந்தவர்கள் மூன்று விளியால் அவளை அழைக்கின்றனர். ‘நந்தகோபாலன் மறுமகளே ‘நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி – என்பவை அவை. கிருஷ்ணனை நந்தகோபன் குமரன் என்று ஆதரித்தார்கள் அல்லவா? அதேபோல இவர்களைப் பற்றுவார்க்கும் அவரவர்கள் உக்க்குமாறு சொல்ல வேண்டும் என்று நந்தகோபரை முன்னிலைப்படுத்திஅவருறவு சொல்லுகிறார்கள். பெண்களுடைய மன நிலையும் அப்படி. பிறந்து வளர்ந்து பாராட்டும் சீராட்டும் பெற்றது பெண்கட்குப் பிறந்தகம் தான். ஆனாலும் புக்க்கமே அவர்களால் பெரிதும் பாராட்டப்பெறும்“ வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகத்து ஈட்டிய வாழ்வே“ என்று ஒரு பெண் பேச்சு. பிறந்த வீட்டு வாழ்வு எல்லாம் பெண்கட்கு இடைக்காலத்து இருப்புத்தான் புக்ககத்து வாழ்வே நிலைபெற்றுப் பொருந்திய வாழ்வு எனலாம். பூ மன்றும் மாது பொருந்திய மார்பன்“ என்றார். அரங்கத்தமுதனார். இங்ஙனம் அவளுகப்பது கண்டு “நந்தகோபாலன் மறுமகளே“ என்கிறார்கள். கண்ணன் பிறந்ததன்பின் ஆயர்பாடியில் இவ்வுறவில்லாதார் யார் என்ற கணக்கிலே, அவன் பேசாது கிடக்கப், பின்னர் பெயரிட்டு அழைக்கிறார்கள், “நப்பின்னாய்“ என்று! தங்கள் துயரம் தீரவும் விருமபுவது நிறைவேறவும் கருதிப் பெயரிட்டழைத்தது. மனிதர் நோவு அறிந்து காரியம் செய்கைக்குப் பேரிட்டழைப்பது மரபு. கிருஷ்ணன் ஒருவனே ஆக இவ்விடத்துநாம் இல்லை என்றும் இருப்புத் தெரிந்து கொள்ளட்டும் என்று மீண்டும் வாளா கிடந்தாள் அவள். அப்பொழுது தான் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்“ என்கிறார்கள் கடைசியாக!
பூவுக்கும் வாசனை ஊட்டும் கூந்தல் உடையவளே என்று பொருள். பூவால் வந்த வாசனை இல்லை இதற்கு, “கண்ணன் இல்லையாகில் இப்படியொரு பெருவாசனை வருமோ? நீ ல்லை சொன்னாலும் வாசனை நடு நின்று சான்று சொல்லுகிறதே! நாங்கள் எங்கள் சென்னிப்பூவைச் சூடுமாறு வாசலைத் திற. நீ மட்டும் அவனைத் தனியே அநுபவிக்க ஒண்ணுமோ? பெரு வெள்ளத்தினை அணை செய்யலாகாது. எல்லோரும் கூடி கண்ணனை அநுபவிக்கும்படி செய்வாயாக“ என்று வேண்டுகிறார்கள் “கடைதிறவாய்“ என்று! பிறகு நடுநிசியிலே வந்து எழுப்புகிறது என்? என்று நப்பின்னை கேட்க, வந்தவர்கள் விடிந்துவிட்டது. வந்து எங்கும் கோழி அழைத்தன காண். மாதவிப் பந்தர் மேல் பங்கால் குயிலினங்கள் கூவின காண்“- என இரடையாளங்களைச் சுட்டுகிறார்கள் அவர்கள். ஒரு கோழி மட்டுமில்லை. பல கோழிகள், ஓரிடத்தில் மட்டுமில்லை எல்லாவிடங்களிலும் ஒருகால் கூவியடங்குவன இல்லை. பலகாலும் கூவிக்கொண்டு, என் வாசலிலே வந்து விடிந்துவிட்டது கதவு திறந்து வெளியே வா? என்பாரைப் போலக் கூவுகின்றன என்பது கருத்து. இதற்குப் பிறகு தான் இருவரும் பந்தாடுவது கண்டு முற் கண்டபடி பேசி முடித்தார்கள்.
எடுத்த எடுப்பிலே நந்தகோபாலன் மறுமகளே‘ என்று கூப்பிட்டார்கள் இல்லையா? அதற்கு ஏற்க அவனது படையாண்மையைப் பற்றி “உந்து மத களிற்றன்‘ – ஓடாத தோள் வலியன்‘ என்று பாராட்டுகிறார்கள். முன்னர் “அறம் செய்யும் நந்தகோபாலன்“ எனக் கொடைத்திறனைப் பேசினார்கள். அது போலப் படைத்திறனைப் புகழுகிறார்கள்இங்கு. ஆண்மையாகிய வீரத்துக்குப் பெருமிதம் என்று பெயர். “கல்வி தறு கண். இசைமை, கொடை எனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே“ என்று கூறும் தொல்காப்பியம். “படையுளும் ஒருவன், கொடையுளும் ஒருவன் – என இருவகையாலும் சிறப்பதே சுத்த வீரனுக்கு இலக்கணம். “உந்தும் மத களிற்றன் – என்பது, மதம் பெருக்குகின்ற களிற்றினை ஒத்த வலியமிடுக்கு உடையவன் என்று அவனது பேராற்றல் பற்றியது. மதம் மிக்க களிறுகளை வேறுபடைகள் இன்றி வெறும் கையாலேயே தள்ளி பின்னிட்டு ஓடச் செய்யும் அவனது மிடுக்கு என்றும் பொருள் படலாம். ‘ஓடாத தோள் வலியன்“- என்றது நந்தகோபனது தோறாற்றலைக் குறிப்பிடுகிறது. பகைவர்கட்குத் தோற்றுப் புறமுதுகு காட்டுவது வீரத்துக்கு இழுக்கு. அது என்று மில்லாது மறமன்னர்க்கு மார்பு கொடுத்து எதிர். நிற்பவனே தவிரப் புறம் காட்டாதவன் எனத் தோள் வலியைப் புகழ்ந்து பேசியபடியிது என்று பெயர்.“கல்வி நாட்டில் மற்றையோரிடம் நடையாடாத தோள் வலியுடையவன் எனப் பேசியபடியுமாம் தன் ஒப்பார் இல்லாத தோள்மிடுக்கு உடையன் அவன் என்பது இதன் கருத்து.
‘நந்தகோபாலன் – என்று, வந்தவர்கள் அவன் பேர் சொல்லுகிறார்களே, தகுமா என்று தோற்றும். செல்வச் சிறப்பாலும் தோள் வலியாலும் பிறர் எவரும் அவருக்கு அருகு நில்லார்கள். அதுபோலே, நந்தகோபாலா எழுந்திராய் என்று பெண்களும் பேர் சொல்லி அழைக்கும்படியான எளிமைப் பண்புக்கும் நிகரற்றவன் அவன். இதனால், தாழ்ந்தோரை காக்கும் கடமையிலே தன்னை இப்படி அற்பணித்துக் கொண்டுள்ளவன் என அவனது நீர்மை புலப்படுகிறது. இப்போது பெண்கள் ந்ந்தகோபனுடைய படைவலி. எளிமைப் பண்பு முதலானவற்றை நினைப்பதற்கு உரியகருத்து உண்டு. இவர்கள், கண்ணனுக்கு கம்சபயத்தால் எப்போது எப்படித் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சி நடுங்குபவர்கள். அப்படி, அஞ்சினார்க்கு அச்சம் தீரும்படி அமைந்த்து அவனது போராண்மைஇ கண்ணன் தீம்புகளை நினைத்தாலும் இவளது தோள்வலியை நினைந்து பயம் கெடலாயிருக்கும். கம்சன் மாளிகையின் நிழலின் கீழே கண்ணனுக்கு எந்த தீங்கும் வராதபடி காக்கும் அவளது மிடுக்கை நினைத்து அவர்கள் பயங்கெட்டிருக்கிறபடியை எடுத்துக் காட்டுவன இது.
‘கந்தம் கமழும் குழலி – உன் செந்தாமரைக் கையால் சீரார்வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து“ – என்று வந்தவர்கள் வேண்டுதலில் அரிய கருத்து நயம் ஒன்றுண்டு. ‘வந்து திறவாய் மகிழ்ந்து‘- என்று ந்தவர்கள் வேண்டுதலில் அரிய கருத்து நயம் ஒன்றுண்டு. “வந்து திறவாய்‘ என்பதால் எங்கள் கண்ணுக்கு இரையிட்டு இன்பம் தரவேண்டும். வளை ஒலிப்ப என்றதால் செவியின் பட்டினி தீர்ந்து இன்பம் தரவேண்டும். “பேர்பாடி‘ என்பதால் நாவினால் பெறும் இன்பம் உற வேண்டும். “செந்தாமரைக் கையால்‘ என்றதால் தொடு உணர்ச்சி கூடி மெய் இன்பம் பெற வேண்டும். “கந்தம் கமழும் குழலி“ என்றதால், நாசிக்கு இன்பமூட்டி மகிழவைக்க வேண்டும். இப்படி, ஐம்பொறிகட்கும் ஒருசேரப் பேரின்பம் பெற்று இதனை உன்னாலே அடைந்தோம் எனக்கருதி மகிழும்பேறு உன்னுடையதாக வேண்டும் என்கிறார்கள். இதனால் நீ கண்ணனோடு எங்களைச் சேர்து வைக்கவேணும். ஐவகைப் பொறிகளும் பிறையும் பேரின்பம் எங்கட்குக் கண்ணனோடு கூடுவதனாலே கிட்டும். அதற்கு முன்னோடியாக புருஷகாரபூதை யான் உன்னிடம் நாங்கள் இவ்வாறு பெறுவதனால் இனி அதுவும் கிட்டும் என்ற உறுதிப்பாடு கொண்டு நாங்களும் மகிழுவோம். ஆக நீயும் மகிழ்ந்து, நாங்களும் மகிழும்படி வந்து திறவாய் என வேண்டுகிறார்கள்.

Add a Comment