POST: 2018-01-07T14:44:47+05:30

இலை உதிரலாம் மலை சாயலாமா !
======================================

-ஒளவை நடராசன்

இனிய நண்பர் மலையப்பன் மறைவு எல்லையில்லாத துயரத்தைத் தருகிறது.
ஓட்டமும் நடையுமாக வாழ்க்கை முழுவதும் ஓட்டுப்பற்றில்லாத தியாக உணர்வோடு உறவினர்கள் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்த இரக்க மனத்திற்கு ஆல் போல் நின்று மலையப்பனாகத் திகழ்ந்தார் .

தன் மகன் முரளி ,ஆனந்தி ,மருமகன் மணிகண்டன் ,தம் தமக்கை , தன் தம்பி ,தன் மாமன் என்று எல்லோரையும் கோபுரத்தில் ஏற்றி வைத்தார்.

பிள்ளைகளும் அப்பா கிழித்த கோட்டை எந்த நாளும் தாண்டியதே இல்லை.
புதுக்கோட்டையில் அவரை அறியாதவர்கள் இல்லை. அவர் அறியாதவரும் இல்லை.

பொது வாழ்க்கைக்கு ஊரே திரண்டு வந்து புகழ் மாலை சூட்டும். .ஆசிரியர்,அறிஞர் ,அறிவுரைஞர், சாரணர் ,ஊர்காவலர் ,ஆர்வலர் என அவர் எல்லாத் துறைகளிலும் தலைவராக இருந்தார்.

புதுக்கோட்டைக்கு போகும் போதெல்லாம் அண்ணன் என் வீட்டில் தான் சிற்றுண்டியும் ,காபியும் சாப்பிடுவார் என்று சொல்லி மகிழ்வார் .

செல்வன் மணிகண்டனை வளர்ப்பு மகனைப் போல நாங்கள் கருதினோம் .
இருந்தார்ப் போல இருந்து திடுமென்று இந்த செய்தி இடியாக வந்து விழுகிறது.

அனைவரும் ஆறுதல் கொள்வதைத் தவிர வேறென்ன கூற முடியும் .

கலங்கிப் புலம்பும் முரளியின் தோள்கள் தான் இந்த உறவுப் படைக்குத் தலைமை தாங்க வேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *