மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-163
—————-
மா.தருமலிங்கம் என்ற நாகைத் தருமன், மருதவாணன், இலட்சுமி மணாளன் ஆகிய புனை பெயர்களில் பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் கதைகளையும் எழுதிக் குவித்தவர். மேலும், மன்றம், நவமணி, அண்ணா நாளிதழ்களில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
வாயில்தோறும் வள்ளுவர் என்று வாரம்தோறும் விழா எடுத்து நாகையில் இல்லம்தோறும் வள்ளுவர் படம் இடம்பெறத் தூண்டியவர்
25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய நூலாசிரியர். பேரறிஞர் அண்ணாவுடனும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றிய பெருமை படைத்தவர்.
அவருடைய குறிப்பிடத்தக்க நூல்களான அண்ணாவின் கடைசி நாட்கள், மறக்க முடியாத திரையுலக மாமணிகள், இதயக்கனி எம்.ஜி.ஆர்., பாரதரத்னா எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ற நூல்களை எல்லாம் தன்னுடைய பேரறிஞர் அண்ணா பதிப்பகம் “தமிழ்ச்சோலை” வழியாக வெளியிட்டவர்.
புரட்சித்தலைவர் –
ஒன்பது எழுத்துகளின் ஊர்வலம்
இரு சொற்களின் அற்புத இணைப்பு
என்று குறிப்பிட்டு விசுவாசம்தான் என் சுவாசம்; நன்றி என்னோடு ஒன்றிவிட்டது; அல்லல் பட்டாலும் அலைபாயாத, நிலைகுலையாத, தடம் மாறாத தொண்டன் நான் என்றுதான் தன்னைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டுக்கொள்வார்.
அவருடைய நூல்களில் பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவரைப் பற்றி குறிப்பிட்ட சிறந்த ஒரு மேற்கோள் வரும். அது “எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும் உண்மைதானே!”
எம்.ஜி.ஆர். என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எதுவென்பதை நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டென்பதைக் கூறவா வேண்டும்? எம்.ஜி.ஆர். நடிகமணிகளிலே வீரர்-விவேகம் நிரம்பிய தோழர் – இல்லோதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடைய அறிவியக்கவாதி.”
புரட்சித்தலைவரைப் பற்றி ஒளி-ஒலி காட்சி ஒன்றை அமைப்பதற்காக தானே எழுதிய வசன குறிப்பு!

Add a Comment