மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-165
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி:
————
தந்தை பெரியாருடன் புரட்சித் தலைவர் வீடியோ காட்சி அல்லது புகைப்படம்.
பெரியார் குரல் ‘எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு உதவும்கருணை உள்ளம் கொண்டவர்.
எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பெரிய மனசு. என் மேலே ரொம்பப் பிரியம்.’
காட்சி :
————-
பேரறிஞர் அண்ணாவுடன் புரட்சித் தலைவர் வீடியோ காட்சி, அல்லது புகைப்படங்கள்.
பேரறிஞர் அண்ணாவின் குரல்
————————————————
‘கலைஞர்கள் எல்லோருமே கலையுலகை நான்கு பக்கங்களும் இரும்பு திரைகளிட்ட ஒரு வீடாகக் கருதி, அதற்குள் வசித்து வந்தனர். அவர்கள் அரசியல் உலகை மட்டுமல்ல, வெளியுலகைக்கூட எட்டிப் பார்த்தும் அறியார். இது தமிழகத்தின் தொன்று தொட்ட வழக்கமாகும்.
அந்தக் கலைஞர்களுக்கெல்லாம் ஒரு ‘வழிகாட்டி’யாக இருந்து விட்டவர் புரட்சி நடிகர்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘கலை வீட்டிலிருந்து’ எட்டிப்பார்த்ததுடன் நில்லாது- அரசியல் உலகுக்கும் தாவிப்புகுந்தார். அந்த எண்ணம், வருங்காலத்தில் மற்ற கலைஞர்களுக்கும் மறுமலர்ச்சி தருவதாகும். அவருடைய அந்தச் செயல் புரட்சிகரமானது.
ரத்தினச் சுருக்கமாக ஒன்றைக் கூறவேண்டுமானால், எண்ணமென்பது ‘அக’மென்றும், செயலென்பது ‘புற’மென்றும் கூறலாம்.
இதனை நம் நடிகர்கள் மேற்கொள்ள வேண்டும். அகம், புறம் இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும்.
நடிகரும் மக்கள் இனமே. வாழ்வின் வளத்துக்கே கலை உதவ வேண்டும் என்ற சீரிய நோக்கம் கொண்டவர் புரட்சி நடிகர்.
இந்த நோக்கம் தனக்கு மட்டும் இருந்தால் பயனில்லை ஏனைய கலைஞர்களுக்குள்ளும் புக வேண்டும், தான் பெற்ற இன்பத்தை அவர்களும் அடைய வேண்டும் – அதற்குத் தானே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று, தடுத்தவர் – பகைத்தவர் – வெறுத்தவர் மத்தியில் அரசியலில் தாவிப் புகுந்தார்.
மக்களுக்கு உதவுகிறார் – இன்னும் உதவ வேண்டுமென்று துடிக்கிறார் – செய்து கொண்டே இருக்கிறார்.
ஆக, அகத்திலும் (நடிப்பிலும்), புறத்திலும் (அரசியலிலும்) ஒருங்கே சிறப்பை எட்டிப் பிடிக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். உண்மைதானே!
எம்.ஜி.ஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எதுவென்பது நாடு அறியும்.
முல்லைக்கு மணம் உண்டு என்பதைக் கூறவா வேண்டும்? இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர். அது என் மடியில் வந்து விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்.
வளமான கருத்தும், வாழ்க்கை நெறியும் உள்ள உணர்ச்சியும், எழுச்சியும் தரும் அழகான வடிவம் கவிதை என்று கவிதையைப் பற்றி எம்.ஜி.ஆர் கூறினார். எம்.ஜி.ஆரே வளமான கருத்துகள் உள்ள அவர் கூறியதைப் போல் வாழும் அழகான கவிதைதான்!’
மூதறிஞர் இராஜாஜி குரல் இராஜாஜியுடன் புரட்சித்தலைவர் புகைப்படம்
‘எம்.ஜி.இராமசந்திரனைக் கட்சியிலிருந்து விலக்கியது, மறைந்த அண்ணாவையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர் அவரை அப்படி விட்டு விடாதீர்கள். அர்ச்சுனனைப் போல அவரை வெற்றிவீரர் ஆக்குங்கள்…!’
முன்னாள் பிரதமர்…
அன்னை இந்திரா காந்தியுடன் புரட்சித்தலைவர் நிகழ்ச்சியில் பங்குகொண்ட வீடியோ படம்… அல்லது புகைப்படங்கள்….
அன்னை இந்திரா குரல் :
—————————————–
‘தேச ஒன்றுமைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் தங்களையே ஒப்படைத்துக்கொண்டு, பாடுபடுகின்ற நல்ல தலைவர்களில் எம்.ஜி.ஆர் முக்கியமானவர். ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் வாழுகின்ற அவர் தலைமையில் தமிழகம் முன்னேறுவது உறுதி’
(பிரதமர்) ராஜீவ் காந்தி குரல் :
————————————————
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் புரட்சித் தலைவர் வீடியோ படம். கடற்கரைக் கூட்டத்தில் புரட்சித் தலைவர் கையை உயர்த்திப் பிடிப்பது… மற்றவை… !

Add a Comment