மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-166
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————-
மக்கள் குரல் எதிரொலிப்பது அண்ணாவின் இதயக்கனி வாழ்க!
மக்கள் திலகம் வாழ்க!
பொன்மனச் செம்மல் வாழ்க!
தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் வாழ்க!
முதல்வர் புரட்சித் தலைவர் வாழ்க!
காட்சி :
————-
மேதகு தமிழக ஆளுநர் பட்வாரி அவர்கள்
முதல்வர் புரட்சித் தலைவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தல்!
புரட்சித்தலைவர் (குரல்) எம்.ஜி.இராமசந்திரன் என்கிற நான் இந்திய அரசியல் சட்டத்தின்பால் பற்றுடனும், இந்திய ஒருமைப்பாட்டுக்காகவும்…
ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்து, கைகுலுக்குதல். எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தல்.
(30.06.77)
காட்சி :
————
சென்னை, அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார், புரட்சித் தலைவர். அதன் பின்பு மக்களை நோக்கிக் கையசைத்தல்… வணக்கம் தெரிவித்தல்
செய்திப் படப் பிரிவுப் படத்தை வீடியோ படமாக்கி
திரையிடலாம். அல்லது புகைப்படத்தைக் காண்பிக்கலாம்.
காட்சி :
————
தொலைக்காட்சியில்
பத்திரிக்கையாளர் சந்திப்பு.
-அல்லது-
புரட்சித்தலைவர் முதல்வரானதும்
பத்திரிக்கையாளர் மத்தியில்
பேசுவதுபோல் காட்சி… பேட்டி!
ஒரு பத்திரிக்கையாளர்:
—————————————
முதலமைச்சராகத் தமிழகம் தங்களைக் கண்டு அகமகிழ்கின்றது. பத்திரிக்கையாளர்கள் சார்பில் எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர்:
—————-
எங்களுக்கும்… மக்களுக்கும் இடையில் நல்லுறவுப் பாலமாகத் திகழும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி! எங்கள் வெற்றியிலும், இனி நாங்கள் செய்ய நினைக்கின்ற அரிய பணிகளிலும் உங்களுக்கும் பங்குண்டு.
பத்திரிக்கையாளர்:
——————————–
ஒரு இயக்கத்தைத் துவக்கி, 56 மாதங்களில் ஆட்சியைப் பிடித்த ஒரே அரசியல் தலைவர் தாங்கள்தான். இந்தச் சாதனையை எப்படிச் செய்தீர்கள்?
முதல்வர்:
—————-
நீங்கள் என்னுடைய சாதனை என்கிறீர்கள். நான் மக்களின் மகத்தான வெற்றி என்று கருதுகிறேன்.
பத்திரிக்கையாளர்:
——————————-
தாங்கள் போட்டியிட்ட அருப்புக்கோட்டை தொகுதியில், 29 ஆயிரத்து 378 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றீர்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட 11 பேர்களும் சேர்ந்து மொத்தமாக வாங்கியுள்ள வாக்குகளே 9 ஆயிரத்து 548 தான். மிக அதிக வாக்கு வித்தியாசம். 195 இடங்களில் போட்டியிட்டு 127 இடங்களில் தனிப் பெரும் பான்மையை உங்கள் கட்சி பெற்றிருக்கிறது. தோழமைக் கட்சிகளையும் சேர்த்து 144 இடங்களைப் பெற்றிருக்கின்றீர்கள். இது சாதாரணமான ஒன்றல்ல. மக்கள்தான் வெற்றியைத் தரக் காரணம் என்று நீங்கள் கூறினாலும், அந்த வெற்றி இயக்கத்திற்குக் கிடைக்கத் தாங்கள் தானே காரணம்?
முதல்வர்:
—————
நான் சார்ந்துள்ள இயக்கத்தின் மீதும், எங்கள் அணியினர் மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கைதான் காரணம். (புன்முறுவல்)
பத்திரிக்கையாளர்:
——————————–
கலைத்துறையிலிருந்து அதாவது சினிமாவிலிருந்து வந்ததால்தான் இவ்வளவு ஆதரவு என்கிறார்களே…!
முதல்வர்:
—————-
கலைத்துறையில், சினிமாவில் நான் மட்டும் பணிபுரியவில்லை. அப்படி உள்ளவர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
பத்திரிக்கையாளர்:
——————————–
கலைத்துறையிலிருந்து வந்தவர் தாங்கள், என்பதும் ஒரு சாதனைதானே!
முதல்வர்:
—————-
அந்தச் சாதனையைச் செய்தவர் எங்கள் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாதான்!. நான் நடிப்புத் துறையை மட்டுமே சின்னஞ்சிறு வயதுமுதல் நம்பியிருந்த நடிகன். நான் மற்ற துறைகளைப் பற்றி அறிந்தவன் என்றாலும் எனது ஏழாவது வயது முதல் நான் நடிப்புத் தொழிலில் இருந்தவன்.

Add a Comment