POST: 2018-02-14T10:04:02+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-167
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

பத்திரிக்கையாளர் :
——————————–

நடிப்புத் துறையிலிருந்து ஒருவர், நாடாளுவது தமிழகத்தில் – இந்தியாவில் ஏன், உலகத்திலேயே முதன்மையானவர் நீங்கள்தான்!. அந்தப் பெருமை உங்களுக்குத்தான்!.

முதல்வர் :
—————–

மிக்க நன்றி! இந்தப் பெருமை கிடைக்கக் காரணமானவரும் பேரறிஞர் அண்ணாதான்!. அரிதாரம் பூசி நடிப்பவர்கள் கூத்தாடிகள், நாடகமாடிகள் என்று இழிவாகப் பலர் நடிகர்களைப் பற்றிப் பேசியபோது அதனைப் போக்கியவர் அவர்தான்!. நடிப்பவர்களைக் கேவலமாக நினைப்பதை மாற்ற, எம்.ஏ பட்டம் பெற்ற பேரறிஞரான அவரே அரிதாரம் பூசி நடித்தார். நடிப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படச் செய்து, மக்கள் நலனுக்காக அவர்கள் பாடுபடுவார்கள் என்பதை உணர்த்தினார்.

பத்திரிக்கையாளர்:
——————————–

எதைச் சொன்னாலும், நீங்கள் அண்ணாவைப் பற்றியே கூறுகிறீர்களே!

முதல்வர்:
—————

வந்த வழியையும், வளர்த்தவர்களையும் மறந்தவர்களை மக்களும் மறந்துவிடுகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டதனால் மட்டுமல்ல….. என் இயல்பே அதுதான்!.

பத்திரிக்கையாளர்:
——————————–

மக்களுக்கு……….. இவ்வளவு மகத்தான வெற்றியைத் தந்தவர்களுக்கு என்னென்ன செய்யப் போகின்றீர்கள்?

முதல்வர்:
—————

எங்களை நம்பி ஆட்சிப்பீடத்தில் அமர்த்திய அவர்களுக்கு நம்பிக்கையானவர்களாக இருந்து நன்மையைச் செய்வது! என்னைப் பெற்ற தாயும், அரசியல் ஆசான் அண்ணாவும் என்னை அப்படித்தான் உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஆசியோடு தமிழக மக்களையும் தமிழகத்தையும் வாழ வைக்கப்பாடுபடுவோம்.
நன்றி வணக்கம்.
(கைகூப்பி வணங்குகிறார்)

காட்சி:
———–

தொலைக்காட்சி அல்லது வானொலியில் முதல்வர் புரட்சித்தலைவர் ஆட்சி பொறுப்பேற்ற வர்ணனையை ஒரு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

”30.06.77 தமிழ்நாடு முதலமைச்சராக எம்.ஜி.ராமச்சந்திரன் பதவி ஏற்றார். ஆளுநர் பட்வாரி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நகரப் பிரமுகர்கள் கூடியிருந்தனர். சென்னை, அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்தபோது தமிழகமே தலைநகரில் கூடி வாழ்த்தியதைப் போலிருந்தது!”

அந்தக் குடும்பத்தில் தாய், தந்தை பிள்ளைகள் பேசிக் கொள்கின்றனர்:

பெண்:
————

அடி… ஆத்தாடி….. எம்மாம் பெரிய கூட்டம். என் சென்மத்திலே இப்பிடி ஒரு சனத்தை நான் பார்த்ததில்லே…!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *