POST: 2018-02-22T12:14:43+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-173
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :
————-

பள்ளி ஆண்டு விழாவில்,
மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணசாமிராவ்,
’லவகுசா’ நாடகத்தில், லவன் வேடத்தில்
எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கிறார்.
அப்போது அவருக்கு வயது ஏழு.
சத்ருக்குனன் வேடம் போட்டவனுடன்
மேடையில் சண்டை.
எம்.ஜி.ஆர்.நடிப்புக்குப் பாராட்டு.
எம்.ஜி.ஆர்.மூன்றாம் வகுப்பு (7வயது)
சக்ரபாணி ஏழாவது வகுப்பு (11 வயது)
நாடகத்தைக் கண்டு ரசித்தவர்கள்
கரவொலி. எதிரொலி.

காட்சி :
————-

மதுரை(பாய்ஸ்) நாடகக் கம்பெனிப் பாடகரான
நாராயணன் நாயர், வேலுநாயர்
இருவரும் உள்ளே நுழைகின்றனர்.
‘லவகுசா’ நாடகத்தில் எம்.ஜி.ஆர்
நடிப்பைப் புகழ்கின்றனர்.
நாடகக் கம்பெனியில் சேர்க்கலாம்
என்று நாராயணன் யோசனை கூறுகிறார்.
அன்னை சத்யா மகன்களைப் பிரியக்
கலங்கி, பின்னர்ச் சம்மதிக்கிறார்.
அண்ணனும் தம்பியும் நாடகக் கம்பெனியில்
சேர்ந்தால் தான் அவர்களும், தாயும்
பசியும், பட்டினியுமாக இல்லாமல்
வாழ முடியும் என்கின்ற நிலை.
சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் மதுரை
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர
முடிவு செய்கின்றனர்.

காட்சி :
————-

கும்பகோணத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு எம்.ஜி.ஆரும், சக்ரபாணியும் புறப்படுகின்றனர். நாராயணன் நாயர் அழைத்துச் செல்கிறார். தாயின் பிரிவை எண்ணிச் சகோதரர் இருவரும் கண்ணீர். தாய் சத்யா அழுகை, ரயிலுடன் கூடவே….”ராமு…சக்கு…” என்றபடி ஓடி வருகிறார். எம்.ஜி.ஆர். தாயின் கையைப் பிடித்துக் கொள்கிறார். ரயில் அவர்களைப் பிரிக்கிறது.

காட்சி :
————-

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆரும், சக்ரபாணியும் சேருகின்றனர்.

காட்சி :
————-

நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு நடனம் சொல்லிக் கொடுக்கும் போது பிரம்பினால் எம்.ஜி.ஆரை அடிக்கிறார். எம்.ஜி.ஆர். அழுகிறார். அண்ணனிடம் தனிமையில்..

எம்.ஜி.ஆர்: (அழுதபடி) இப்படி அடிபட்டுக்கிட்டு என்னாலே இனி மேல் இங்கே இருக்க முடியாது. வா…நாம்ப…ஊருக்குப் போயி அம்மா கூடவே இருக்கலாம்.

சக்ரபாணி:அம்மா கூடவே இருக்கலாம்…… சரிதான்! அம்மாவுக்குப் பாரமா எத்தனை காலத்துக்குத்தான் இருக்கிறது. இவ்வளவு காலமா நமக்காக அவுங்க எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டாங்க. அவுங்களுக்காக இனிமே நாம்ப இதையெல்லாம் சகிச்சுக்கத்தான் வேணும்.சம்பாதிச்சு அம்மாவை நல்லா வச்சுக்கணும்.
எம்.ஜி.ஆர்: எப்படி…? மாதம்…நாலணா சம்பளம்..அதோட ..அடி உதை…திட்டு வேறு. இதில் எதை அம்மாவுக்குக் கொடுக்கிறது?
சக்ரபாணி: பயிற்சி முடிஞ்சதும் அஞ்சு ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க. நம்பப் பாடுபட்டா அது மேலும் மேலும் அதிகமாகும்.
எம்.ஜி.ஆர்: சரி…அண்ணே! எப்படியோ அம்மா நல்லபடியா இருக்கிறதுக்காக எத்தனை கஷ்டமாக இருந்தாலும் பொருத்துகிறேன்.
எம்.ஜி.ஆர். முகமலர்ச்சியோடு செல்கிறார்.

காட்சி :
————-

எம்.ஜி.ஆருக்குப் பாடல், சண்டைப்பயிற்சி முதலியன அளிக்கப்படுதலை ஒளி-நிழல் காட்சியாகக் காண்பித்தல்

காட்சி :
————-

பயிற்சி முடிந்ததும் முதன்முதலாக அர்ச்சுனனுக்கு அம்புகள் எடுத்துத்தரும் உத்தர இளவரசனாக எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடிக்கிறார்.
அர்ச்சுனன் மீது கால் தடுக்கி விழுந்து,
“ஐயோ பாம்பு…. காப்பாத்துங்க”
என்று கூறியதும் மக்கள் கையொலி எழுப்புகின்றனர்.

காட்சி :
————-

‘நல்ல தங்காள்’ நாடகத்தில் கடைசி மகனாக நடிக்கிறார். அழுகை வராததால், திரை அருகில் நின்று கொண்டிருந்த காளி என் ரத்தினம், நாராயணன் நாயர் ஆகியோர் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு தலையில் குட்டுகின்றனர். எம்.ஜி.ஆருக்கு அழுகை தாங்க முடியவில்லை.
அழுது கொண்டே சுற்றி வந்தார் நாடக மேடையை…!
எம்.ஜி.ஆர்: எள்ளும் தண்ணீரும் இரைப்பதற்கும் கொள்ளி வைப்பதற்கும் என்னையாவது உயிரோடு விட்டு விடம்மா…!
என்று கண்ணீர் விட்டுக் கதறுகிறார். மக்கள் கைதட்டுகின்றனர். “பலே…பேஷ்..”என்று குரல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *