மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-174
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————
‘தசாவதாரம்’ நாடகத்தில் பரதனாக நடித்து வந்த பி.யு.சின்னப்பாவுக்கு குரல் கம்மியதால், நாடகப்பேராசிரியர் எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி,ஆரை. பரதன் வேடத்தில் நடிக்க வைக்கிறார். அன்று நாடகம் பார்க்க வந்த கிட்டப்பா, எம்.ஜி.ஆரைப் பாராட்டி, கட்டித் தழுவுதல்.
காட்சி :
————
அன்னை சத்யா தன் இரு பிள்ளைகளையும் எம்.கந்தசாமி முதலியாரிடம் ஒப்படைத்தல்.
எம்.கந்தசாமி முதலியார்:எனக்கு இதுவரையில் ஒரே பிள்ளை (எம்.கே.ராதா) தான்.இனிமேல் உங்கள் பிள்ளைகளையும் சேர்த்து மூன்று பிள்ளைகளாகக் கருதி வளர்ப்பேன்.கவலைப்படாதீர்கள்.
காட்சி :
————
நாடகக் குழுவினருடன் எம்.ஜி.ஆர், சக்ரபாணி பர்மா செல்கின்றனர். உறையூர் மெய்தீன் நாடகக் கம்பெனியுடன் ரங்கூனில் ஆறு மாதங்கள் தங்கி நடித்தார்.அப்போது அவருக்கு வயது 15. மீண்டும் தமிழகம் திரும்பியதும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆர் சேர்ந்தார். ‘பதிபக்தி’ என்ற சமூக நாடகத்தில் முக்கியமான வேடமேற்று நடித்தார்.
காட்சி :
————
‘சதி லீலாவதி’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராகக் காலடி எடுத்து வைத்தார். இன்ஸ்பெக்டர் வேடத்தில் தான் முதன் முதலில் அவர் படத்தில் நடித்தார்.
படம் காண்பிக்கப்படுதல் :
——————————————-
’சதிலீலாவதி’ படத்தின் கதையை எழுதியவர்
கலை மேதை எஸ்.எஸ்.வாசன். எம்.கே.ராதா,டி,எஸ்.பாலையா, கலைவாணர்.என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய பலர் நடித்து அறிமுகமான படம் அது. 1936 ஆம் ஆண்டு அந்தப்படம் வெளிவந்தது.
தொடர்ந்து பல படங்கள்…..
ஆனால்,சின்னச்சின்ன வேடங்கள்!
இரு சகோதரர்கள்,தஷ்யக்ஞம், வீராஜெகதீஷ், மாயமச்சேந்திரா, பிரகலாதன், அசோக்குமார், சீதாஜெனனம், தாசிப்பெண், தமிழறியும் பெருமாள், அரிச்சந்திரா, மீரா, சாலிவாகனன், ஸ்ரீ முருகன் , பைத்தியக்காரன்….போன்றவை அவருடைய திரையுலக வளர்ச்சிக்குப் படிக்கட்டுகளாக அமைந்த படங்கள்
காட்சி :
————
’ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பல தடைகள், தூக்கு மேடையில் உண்மையில் தொங்கி, மூச்சு திணறி உத்தரம் உடைந்து விழுந்ததால் உயிர் பிழைக்கிறார்.
காட்சி :
————
எதிர் வீட்டுப் பெண் மீது எம்.ஜி.ஆர்.காதல்.அந்தப் பெண்ணும் விரும்புகிறது. இதனைத் தாய் சத்யா கவனித்து, திருமணம் முடிக்கத் தீர்மானிக்கிறார்.
காட்சி :
————
சக்ரபாணியிடம் மட்டும் ரகசியமாக, தான் எம்.ஜி.ஆருக்குப் பெண் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு, தாய் சத்யா புறப்படுகிறார். பாலக்காடு, ஒலவக்கோடு செல்கிறார்.
ஊருக்குச் சென்ற தாய்க்கு உடல்நலமில்லை என்று அண்ணன் சக்ரபாணி கூறியதைக் கேட்டு, எம்.ஜி.ஆர்.பதறிக்கொண்டு புறப்படுகிறார். தாய் வற்புறுத்தலின் காரணமாக (பார்கவி) தங்கமணியைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். ஒரேயொரு நிபந்தனை விதிக்கிறார்…’கதராடைதான் திருமணத்தின்போது அணிவேன்’என்று! அவர் பிடிவாதத்திற்கு அன்னை சத்யா சம்மதிக்கிறார்.
திருமணம் முடிந்து, சென்னை திரும்பினர். எம்.ஜி.ஆர். தனது முதல் மனைவி மீது அன்பைப் பொழிகிறார். உயிருக்குயிராக விரும்புகிறார்.(1938)
அண்ணல் காந்தி, சுபாஷ் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் எம்.ஜி.ஆர்.
காட்சி :
————
இரண்டாம் உலகப்போர் காரணமாகச் சென்னை நகரை விட்டுச் செல்கின்றனர் பலர்.
மருமகள்களையும் பேரக்குழந்தைகளையும் அன்னை சத்யா பாலக்காடுக்கு அனுப்பி வைக்கிறார். கணவரைப் பிரிய மனமின்றித் தங்கமணி அழுகை.எம்.ஜி.ஆர்.கண்ணீர்.
காட்சி :
————
தங்கமணி இரண்டு மாதங்களில் மாரடைப்பினால் இறந்து போனார்.விரைந்து சென்ற எம்.ஜி.ஆர்.தன் மனைவியின் முகத்தைக் கூடக் கடைசியாகக் காண முடியவில்லை.மனம் வெறுத்து ஒலவக் கோட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். சக்ரபாணி தடுத்து, காப்பாற்றி விடுகிறார்.
காட்சி :
————
ஜுபிடர் பிக்சர் ‘ராஜகுமாரி’ படம் வெளிவந்தது. பி.யு.சின்னப்பா, தியாக ராஜ பாகவதர், எம்.கே.ராதா, கே.ஆர்.ஆர். போன்ற முன்னணி நடிகர்கள் மிகவும் பிரபலமாக இருந்த போது, எம்.ஜி.ஆர்.முதன்முதலில் கதாநாயகனாக நடித்த படம் வெற்றிவாகை சூடியது(1947)
கதாநாயகன் வேடத்தில் நடித்த பின்பும் ‘அபிமன்யு’, ’ராஜமுக்தி’, ’ரத்னகுமார்’, ‘மோகினி’ ஆகிய படங்களில் இரண்டாவது கதாநாயகன் வேடங்களிலும் நடித்தார்.

Add a Comment