POST: 2018-03-04T10:06:37+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-178
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :

————–
‘ஆயிரத்தில் ஒருவன்’ படக்காட்சி.
பாடல்காட்சி! (1965)

காட்சி :
————–

ஆசைமுகம், எங்க வீட்டுப்பிள்ளை
கலங்கரை விளக்கம், கன்னித்தாய்,
பணம் படைத்தவன், தாழம்பூ,
அன்பே வா, நான் ஆணையிட்டால்,
முகராசி, நாடோடி, சந்திரோதயம்,
பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா,
தாலி பாக்கியம், தனிப்பிறவி, அரசக் கட்டளை, காவல்காரன், தாய்க்குத்தலைமகன்,
விவசாயி, ரகசியப்போலீஸ் 115,
தேர்த்திருவிழா, குடியிருந்த கோயில்
கண்ணன் என் காதலன், புதிய பூமி,
கணவன், ஒளிவிளக்கு, காதல் வாகனம்,
அடிமைப்பெண், நம்நாடு…
படக்காட்சிகள்…
பாடல்காட்சிகள் தொகுப்பு.

காட்சி :
————–

துப்பாக்கியால் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச்
சுட்டுவிட்டுத், தானும் சுட்டுக்கொண்டார்.(12-1-1967)

இராமாவரம் தோட்டத்திலிருந்து இருவரையும்
இராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு
வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். அருகிலேயே டாக்டர்கள்
எல்லோரும் சூழ்ந்து கொண்டு, அவரைக்
காப்பாற்றப் போராடுகின்றனர்.

”அண்ணனைப்போய் கவனியுங்கள்.
அவரைக்காப்பாற்றுங்கள்.!”
என்று டாக்டர்களிடம்
வேண்டுகோள் விடுத்த அரிய பண்பு.
மறுபிறவி எடுத்தார்.
குண்டு ஒன்று, பிரிய மனமின்றி
அவரது தொண்டையில் தங்கிவிட்டது. (தஞ்சம் புகுந்தது போலும்!)

காட்சி :
————–

அவரது படத்தை ஒட்டித் தேர்தல்
பிரச்சாரம்.

காட்சி :
————–

பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர்
அமோக வெற்றி!.

பேரறிஞர் அண்ணாவின் தலைமையில்
தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி
மலர்கிறது!.

ஆட்சியை அண்ணா பெரியாருக்கும்
காணிக்கையாக்குவதாக அறிவிக்கிறார்.

காட்சி :
————–

எம்.ஜி.ஆரை, தமிழ்நாடு சிறுசேமிப்புத்
திட்டத்துணைத்தலைவராக நியமிக்கிறார்.
அண்ணா.

காட்சி :
————–

இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு
சென்னையில் நடைபெறுகின்றது.
தமிழ் மாநாடு மலர் வெளியிடும்
குழு உறுப்பினராக எம்.ஜி.ஆர்
பணிபுரிகிறார்.
அண்ணா பாராட்டு.
சென்னை அண்ணா சாலையில்
எம்.ஜி.ஆர் தன் சொந்தச் செலவில்
பேரறிஞர் அண்ணா சிலை அமைத்தார்.
டாக்டர். ஏ. ராமசாமி முதலியார்
திறந்து வைக்கிறார்.
தமிழ் மாநாடு ஊர்வலம்
மற்ற காட்சிகள்…
அண்ணா சிலை திறப்பு படம்
காண்பிக்கலாம்.

காட்சி :
————–

‘அடிமைப்பெண்’ படத்தில்
நடித்ததற்காகச் சிறந்த நடிகராக
சிங்கப்பூர் சினிமா ரசிகர் சங்கம்
எம்.ஜி.ஆரைத் தேர்ந்தெடுத்தது. (1968)
பிலிம் பேர் பரிசு கிடைக்கிறது.
தமிழக அரசும் பரிசு வழங்குகிறது!.
(முதன் முதலாகப் புரட்சிச்செல்வி
பாடிய திரைப்படப்பாடல்)

“அம்மா என்றால் அன்பு”
பாடல் காட்சி (அடிமைப்பெண்)
இடம்பெறலாம்.

‘நம்நாடு’ படத்திற்குச் சினிமா ரசிகர்
சங்கம் பரிசு
பாடல் காட்சி

காட்சி :
————–

பேரறிஞர் அண்ணா மறைவு.(3.2.1969)
இராஜாஜி மண்டபத்தில் அண்ணாவின்
உடலை, அவரது அன்னையருக்குக்
(எம்.ஜி.ஆர்.) காண்பித்தல்.

இறுதி ஊர்வலத்தில் வேன் மீது
சோகமாக அமர்ந்து செல்வது.
அண்ணா உடல் அடக்கம் செய்யப்
பட்டபோது மயங்கி விழுகிறார்.
படக்காட்சித்தொகுப்பு.
திரையிடலாம்.

காட்சி :
————–

கலைஞர் கருணாநிதியை முதலமைச்சராக்கப்
பாடுபடுகிறார். அவர் முதல்வராகிறார்.

காட்சி :
————–

டாக்டர் நாவலர் பொதுச்செயலாளராகவும்,
கலைஞர் கருணாநிதி இயக்கத்தலைவராகவும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொருளாளராகவும்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *