மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-185
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————
படத்தின் துவக்கக்காட்சி
=======================
இந்து மதக் கோவில் விண்ணைத் தொட்டபடி உயர்ந்து நிற்கின்றது. ஆலயமணி ஓசை எங்கும் எதிரொலிக்கின்றது. பறவைகள் அங்குமிங்கும் பறக்கின்றன.
கிருத்தவ மதக் கோவில் மணியோசை
‘பர மண்டலத்திலிருக்குக்
எங்கள் பிதாவே…..
பிரார்த்தனை!
இஸ்லாமிய மசூதி: தொழுகை
“லாஇல்லாஇல்லல்லா
முகமதுச்சூலில்லா….. என்று
நமாஸ் ஓதப்படுகின்றது.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனை
வெளியில் கார்கள் வந்து நிற்கின்றன. உள்ளேயும், வெளியேயும் பரபரப்பு! டாக்டர்கள் வேகமாக நடந்து செல்கின்றனர்!
வெளியில்-
கண்ணீரும் கம்பலையுமாகப் பெண்கள் சிலரும், கவலையுடன் ஒரு இளைஞனும் நிற்கின்றனர்.
மருத்துவமனையிலிருந்து வெளியே வருகின்ற ஒருவரைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
“அய்யா..தலைவரு எப்படி இருக்காரு? நல்ல சேதி சொல்லுங்க அய்யா! எங்க ஆயுசையெல்லாம் எடுத்துக்காட்டு அந்த மகராசன் நல்லா இருக்கணும்.” என்கின்றாள் ஒருதாய்!
தொலைபேசியில் ஒரு நிருபர் செய்தியைக் கூறுகிறார்.
“M.G.R Born at Kandi.
Learnt at Kumbakonam.”
இன்னொரு நிருபர் கூறுகிறார்
“முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1917ஆம் ஆண்டு, சனவரி மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். நாடாளப் பிறந்த அவர், ரேவதி நட்சத்திரத்திற்கு உரியவர். எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு அண்ணன்மாரும் உடன் பிறந்தவர்கள்.
மூத்த அக்காள் பெயர் காமாட்சி, அடுத்துப் பிறந்த மூத்த அண்ணன் பாலகிருஷ்ணன். மூன்றாவதாகப் பிறந்த சகோதரி சுமித்ரா. நான்காவதாகச் சக்ரபாணியும் அடுத்து எம்.ஜி.ஆரும் பிறந்தனர். பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் கோபாலனும், சத்யபாமாவும் வாழ்ந்தபோதே இறந்துவிட்டனர்.

Add a Comment