மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-187
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————
நாராயணன் நாயர் உள்ளே நுழைகிறார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆர், சக்ரபாணியைச் சேர்க்கலாம். என்று யோசனை. அன்னை சத்யா கலக்கம்.
நாடகக் கம்பெனியில் சிறுவயதில் சேருகிறார். முதன் முதலில், ’மகாபாரதம்’ நாடகத்தில் அர்ஜூனன் வேடத்தில் நடிக்கிறார். (திரையுலகில் புகுந்த பின்பும் ‘அபிமன்யு’ என்ற திரைப்படத்தில் அர்ஜூனன் வேடந்தாங்கி நடிக்கிறார்!)
கலையுலகிலும், அரசியலிலும் அர்ஜுனனாக பல வியூகங்களைத் தகர்த்துத் தன்னிகரற்று விளங்குகிறார்!
(துரோணர் வில்வித்தை அர்ஜூன் அம்பு எய்தல். கனி மட்டும் தெரிவதாகக் கூறுவது கனி விடுவது)
நாடகக் கம்பெனியில் 4 ½ ரூபாய் சம்பளம். ‘சத்தியவான் சாவித்திரி” போன்ற பல நாடகங்களில் நடிக்கிறார்.
அன்னை சத்யா தன் இரு பிள்ளைகளையும் நாடகப் பேராசிரியர் . எம். கந்தசாமி முதலியாரிடம் ஒப்படைக்கிறார்.
“எனக்கு இதுவரை ஒரே பிள்ளைதான். இனிமேல் மூன்று பிள்ளைகள்” என்கிறார் கந்தசாமி முதலியார்.
நாடக மேடையில் உடற்பயிற்சி, நடனம், பாடல், குஸ்தி முதலியவை கற்றுக் கொடுக்கப்படுதல்
நடிக்கத் தொடங்குகிறார்
எதிர்வீட்டு பெண் காதல். தினந்தோறும் தண்ணீர் எடுப்பதற்கு, குழாய்ப் பக்கம் வந்து அந்தப் பெண் நிற்பார். தண்ணீர் எடுக்கின்ற சாக்கில் ஜன்னல் வழியாக எம்.ஜி.ஆரைப் பார்ப்பார். அந்தப் பெண் வருகின்ற நேரத்தில் எம்.ஜி.ஆர் ஜன்னல் அருகில் அமர்ந்து கொள்வார். ஒரு ஆர்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு உச்ச ஸ்தாயியில் பாடுவார்.
பாட்டுச் சாதகம் செய்வது போல் பாவனை!
(காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே………………………. பாடல்)
அன்னை சத்யா ஒருமுறை இதைப் பார்க்கிறார்.
மறுமுறை அந்தப் பெண்ணையும் கவனித்து உண்மையை அறிகிறார். ஒரு நாள் குடம் நிறைய தண்ணீர் கொண்டு வந்து எம்.ஜி.ஆர் தலையில் கொட்டுகிறார். “படவா……. பாடுவேடா பாடுவே…. ! காதலா? என்று சிரிக்கிறார். எம்.ஜி.ஆர் நாணத்தோடு எழுந்து போகிறார்.
1938: மூத்த மகன் சக்ரபாணியிடம் பேசி, எம்.ஜி.ஆருக்குத் திருமணம் உரிய பருவத்தில் செய்ய முடிவெடுக்கிறார். அவர் பாலக்காடு-ஒலவக்கோடு செல்கிறார். தாய்க்கு உடல்நலமில்லை என்று ஊருக்கு எம்.ஜி.ஆர் செல்கிறார்.
தாய் வற்புறுத்தலின் பேரில் பார்கவி(தங்கமணி) திருமணம். கதராடை அணிவேன் என்று எம்.ஜி.ஆர் பிடிவாதம். திருமணத்திற்குப் பின்பு மனைவி மீது அன்பு. இரண்டாம் உலகப் போர் காரணமாகச் சென்னை நகரை விட்டுச் செல்கின்றனர் பலர். அன்னை சத்யா மருமகள்களையும், பேரக்குழந்தைகளையும் அனுப்பி வைக்கிறார் பாலக்காட்டுக்கு. கணவரைப் பிரிந்து செல்ல மனமின்றி (பார்கவி) தங்கமணி கண்ணீர்
கணவரைப் பிரிந்து சென்ற தங்கமணி இரண்டு மாதங்களில் மாரடைப்பினால் காலமானார்.
விரைந்து சென்ற எம்.ஜி.ஆர் தன் மனைவியின் உடலைக் கூடக் கடைசி முறையாகப் பார்க்க முடியவில்லை. மனம் வெறுத்து ஒலவக்கோட்டில் இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயற்சி. சக்ரபாணி தடுத்து விட்டார். (முதல் தடவை தற்கொலை செய்ய முயன்றது வீட்டுப் பீரோவில் மதுபாட்டில் இருப்பதைக் கண்டு, தாயுடன் சண்டையிட்டுக் கடற்கரை சென்றது.)

Add a Comment