மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-192
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
•பரங்கிமலைத் தொகுதியில் வெற்றி! அண்ணா ஆட்சி! தமிழ்நாடு சிறுசேமிப்புத்திட்டத் துணைத் தலைவராகிறார்.
• 1964 ஜூன்–‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்புக்கு முதன் முதலாக எம்.ஜி.ஆருடன் இணைந்து கதாநாயகியாக நடிக்க ஒரு புதிய பெண் வருகிறார்.
மலர்களாலேயே உருவாக்கப்பட்ட ஓர் அழகான ஆடை அணிந்து, மங்கை எனும் அந்தக் குறிஞ்சி மலர் நடிக்க அரங்கினுள் நுழைகின்றது! ‘நாணமோ இன்னும் நாணமோ’ என்ற பாடல் காட்சிதான் முதன் முதலில் எடுக்கப்பட்டது. உண்மையிலே அந்தப் பெண் மயில் நாணத்தோடுதான் எம்.ஜி.ஆரோடு நெருங்கி நடித்தார்.
‘வெல்கம்’ என்று அவர் அரங்கிற்குள் நுழைந்ததும்–எம்.ஜி.ஆர் அன்போடும், கனிவோடும் அழைத்தது நினைவிற்கு வந்தது. அந்தக்காட்சி அருமையாக அமைந்துவிட்டது என்று டைரக்டர் பி.ஆர்.பந்தலு, எம்.ஜி.ஆர் பாராட்டுகின்றார்.
•‘எல்லோரும் பாராட்டுகின்றார்கள்! அழகும், அறிவும், திறமையும் ஒன்று சேர்ந்த இந்த அற்புதமான பெண்யார்…? ‘காரிருளைப் போக்கவரும் பூரண நிலவா? ‘யார்…?’‘ எங்கிருந்து வந்தார்…? ‘தெலுங்கா…? மலையாளமா? கர்னாடகமா….? தமிழா…? வடஇந்தியாவா….? எங்கிருந்து வந்தவர்?’ அரங்கில் பலர் கேள்விக் குறியோடு கேட்டுக் கொள்கின்றனர்.

Add a Comment