மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-196
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
தாய் மேக்கப் சாதனத்தை எடுத்து ஒப்பனை செய்து கொள்ளும் மகளிடம் சந்தியா கண்டிப்பு. பெங்களூரின் படித்தபோது, சென்னை வந்த ஜெயலலிதா தாயுடனேயே இருப்பதற்குப் படப்பிடிப்புக்குச் செல்கிறார். ‘ஸ்ரீசைலா மகாத்மியம்’ படத்தில் தவிர்க்க இயலாமல் பார்வதி வேடத்தில் நடிக்கிறார். (ஏழு வயதில்) அருமையான நடிப்பையும் திறமையையும் கண்டு ஒரு பாடல் காட்சியிலும் மேலும் நடிக்க வைக்கின்றனர்.
16 வயதில் பள்ளி இறுதியாண்டில் ‘எபிஸில்’ ஆங்கிலப்படத்தில் விடுமுறையில் நடித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்வு! பி.யு.சி.யில் சேரக் கல்லூரியில் கட்டணமும் செலுத்துகிறார். ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. ஒரு நாள் மட்டும் கல்லூரி சென்று வருகிறார். விடுமுறை நாளில் பி.ஆர்.பந்தலுவின் ‘சின்னத கொம்பே’ கன்னடப்படத்தில் நடிக்கிறார் ஜெயலலிதா.
‘வெண்ணிற ஆடை’ படத்தில் நடிக்க டைரக்டர் ஸ்ரீதர் அழைப்பு. தாய் சந்தியா, திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையை விளக்கி, மகளை ‘நடிக்க விரும்பினால் நடி’ என்கிறார். படித்து, பட்டம் பெற்று வழக்குரைஞராக விரும்பிய செல்வி ஜெயலலிதா தாயிடம் வாதிடுகிறார். ஒருநாள் மேக்கப் சாதனத்தைத் தொட்ட தன்னைக் கண்டித்ததைக் கூறுகிறார். குடும்ப நிலையையும், ஜெயலலிதா தாத்தாவும் சென்னைக்குக் குடும்பத்துடன் வந்ததையும் தெரிவிக்கிறார். ‘விரும்பாவிட்டால் வேண்டாம். ஹைதராபாத் தோட்டத்தை விற்று, சிறிய வீட்டில் வசிக்கலாம்’ என்கிறார்.
இரவு முழுதும் சிந்தனை….. ! கண்ணீர் சிந்துகிறார். படிப்பைத் தியாகம் செய்து விட்டு, நடிக்கக் காலையில் சம்மதம் தெரிவிக்கிறார். ‘வெண்ணிற ஆடை’ படத்தில் ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல’ பாடல் காட்சியில் முதன் முதலில் நடிக்கிறார்.
எம்.ஜி.ஆர் முதன்முதலாக ‘பாக்தாத் திருடன்’ படப்பிடிப்பில் தாயுடன் வந்த ஜெயலலிதாவைப் பார்க்கிறார். நாட்டியமாடிய ஜெயலலிதாவுக்கு (12 வயது) வெள்ளிக்கோப்பை ஒருமுறை பரிசளிக்கிறார். கன்னடப்படம் பார்த்துவிட்டு, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கச் சம்மதிக்கிறார்.

Add a Comment