POST: 2018-04-21T09:27:38+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-201
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’ (பகுதி-37)
===========================================

சில கருத்து, கொள்கைகள் குறித்து இருவரும் விவாதம்

எம்.ஜி.ஆர் தம் இயக்கத்தவருடன் விவாதிக்கும் போது, புத்தகம் படித்துக் கொண்டே எதார்த்தமாகக் கவனிக்கும் வாய்ப்பு!

கொள்கை பரப்புச் செயலாளராகப் புரட்சித் தலைவரால் நியமிக்கப்பட்டதும், செல்வி ஜெயலலிதா அந்தப் பொறுப்புக்கு உரியவராகச் செயல்பட்டார். கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டார். அது சிலருக்குப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் புரட்சித் தலைவரிடத்தில் குறை கூறியவர்களுக்கும், புரட்சிச் செல்வியை மதிக்க மறந்தவர்களுக்கும், மறைமுகமாகவும் நேரடியாகவும் அறிவுறுத்தினார்.

”பொறுப்பை மதியுங்கள்- கட்சியின் வளர்ச்சிக்காக. பொறுப்பை ஏற்றுள்ளது குறைந்த வயதுள்ள (34) ஒரு பெண், அதுவும் நடிகையாக இருந்தவர் என்கின்ற எண்ணத்தோடு குறை சொல்லாதீர்கள். செயல்படுவதையும், அறிவுக் கூர்மையையும், தெளிவையும், துணிவையும், கருணையையும் கவனியுங்கள்.” என்றார்.

அவர்கள் கண்களும், மனமும் பழுதானதால் பல பிரச்சனைகளுக்குப் புரட்சித் தலைவரிடம் வந்தனர். கொள்கை பரப்புச் செயலாளர் கவனிக்க வேண்டியவை அவை. ஆகவே…….

· “ கள்ளுக்கடை மறியலை நிறுத்தும் படி அண்ணல் காந்தியிடம் சிலர் குறிப்பிட்டனர். ‘ அதைப் பற்றி முடிவு செய்வதென்றால் ஈரோட்டில் ஈ.வே. ராமசாமி மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாளிடம் கேட்க வேண்டும்” என்று காந்தி தெரிவித்தார்.
ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, மீண்டும் அதில் நான் குறுக்கிட்டு என் செல்வாக்கைக் காண்பிப்பது, சரியுமல்லா. முறையுமல்ல” என்கிறார் புரட்சித் தலைவர். எதையோ சாதிக்க வந்தவர்கள் சரிந்து விழுகின்றனர்.

· சத்துணவுத் திட்டச் செயல்பாட்டு கண்காணிப்பு உயர்மட்டக் குழு உறுப்பினராகச் செல்வி ஜெயலலிதா நியமனம் புரட்சி செல்வி ஜெயலலிதா தன் சொந்தச் செலவில் அன்னை சந்தியா பெயரில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் சத்துணவுக் கூடத்தை உருவாக்கித் தருகின்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *