மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-205
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’ (பகுதி-41)
===========================================
ஆகஸ்ட் 1987: அமெரிக்கா சென்று, பரிசோதனையை முடித்துக் கொண்டு செப்டம்பர் மாதம் திரும்பினார்.
22.12.87: சென்னையில் நேரு சிலையைப் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். புரட்சித் தலைவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி அதுதான்
24.12.87: புரட்சித் தலைவர் அதிகாலை நேரத்தில் உடலால் மறைந்தார்.
உணர்வுகளால் மக்களோடு ஒன்றிவிட்டார்.
இராஜாஜி மண்டபத்தில் அவர் நல்லுடல் வைக்கப்பட்டது. பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய, மாநிலங்களின் அமைச்சர்கள் அஞ்சலி, பிரமுகர்கள், மக்கள் அழுகை
அலைகடல்கள் யாவும் ஆர்ப்பரித்துச் சென்னைக்கு வந்தது போல் கூட்டம்
அதிர்ச்சியால் மாண்டோர்….
தீக்குளித்துச் செத்தவர்கள்….
விஷமருந்திப் பலியானோர்…..
நெரிசலில் சிக்கி உயிர் துறந்தோர் ஏராளம்….
25.12.87: பீரங்கி வண்டியில் புரட்சித் தலைவர் உடல் வைக்கப்படுகிறது. இறுதி ஊர்வலம். மாலை 3 மணியளவில் தான் பின்பற்றிய தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்கும் நினைவிடம் அருகில் புரட்சித் தலைவர் ஓய்வு கொள்கிறார்.
துப்பாக்கிக் குண்டுகள் முழங்குகின்றன!
இராணுவத்தினர்… முப்படையும் இதோ மரியாதை செய்கின்றன!
மத்திய அரசு பாரத ரத்னா பரிசு வழங்குகிறது
புரட்சித் தலைவர் இறந்துவிட்டாரா? மறைந்து விட்டாரா?
சரியாத சரித்திரம் படைத்து, சகாப்தமாகத் திகழ்பவரை…..
சாவு தொடமுடியுமா?
வற்றாத வரலாறாகத் திகழ்ந்த
வானமளந்த புகழ்கொண்ட….
வள்ளலை நம்மிடமிருந்து அள்ளிச்செல்ல
காலனும் மனம் கலங்குவானே!
புரட்சித் தலைவர், உலகம் முழுதும் உள்ள கருணை உள்ளங்களில் குடி கொண்டுள்ளார்.

Add a Comment