POST: 2018-05-17T15:07:04+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-212
—————-

1992ம் ஆண்டு நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, ஒருமுறை நடிகர் எம்.என்.நம்பியர் அவர்களை சந்தித்தேன்.

அவர் என்னிடம், புரட்சித்தலைவரைப் பற்றி ஓர் அரிய தகவலை தெரிவித்தார். அதனை உடனடியாக சாவி பத்திரிக்கை ஆசிரியர் அண்ணல் சாவி அவர்களிடம் சொன்னபோது, அதனை உடனடியாக அவருடைய
வார இதழில் வெளியானது. அது,

“எம்.ஜி.ஆர். எனக்கு செய்த துரோகம்”
—————————————————————

1945லிருந்து 1977 வரை தொடர்ந்து 32 ஆண்டுகள் நான் ஒரே வயதில்தான் இருந்தேன். என்ன வியப்பாக இருக்கிறதா? 20-25க்குள் எம்.ஜி.ஆர். பள்ளிக் கூட மாணவர் என்றால் அவருக்கு வயது 18. எனக்கும் 18 வயது. அவர் கல்லூரியில் மாணவர் என்றால் நானும் கல்லூரி மாணவன். இப்படி எப்போதும் நாங்கள் இருவரும் இளைஞர்களாகவே இருந்தோம்.

எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லது பண்ணினதாக சொல்வாங்க. ஆனால் அவர் எனக்கு துரோகம் பண்ணிவிட்டார். 1977ம் ஆண்டு ஏன் தான் வந்ததோ? அவர் திடீரென்று முதலமைச்சர் ஆகிவிட்டார். அவருக்கு வயது பற்றிய கவலை இல்லாமல் போய்விட்டது. வாலிபனாகவே இருந்த எனக்கு ஒரேடியாக 30 வருடங்கள் கூடுதலாக ஆகிவிட்டது. அவர் மட்டும் முதல்வராகாமல் நடித்துக் கொண்டே இருந்துவிட்டால், நானும் நடித்துக்கொண்டே இருந்திருப்பேன். இப்போது நிஜ வயது தெரிந்துவிட்டதால், அதனால் எனக்கு ஏகப்பட்ட மரியாதை. அதனால், நான் பல படங்களை இழக்க வேண்டியதாயிற்று.
என்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *