மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-238
—————-
தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்தை1987ஆம் ஆண்டு தன் கைப்படத் திறந்துவைத்துத் தஞ்சைக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தார்.
1983 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவுடன் கலந்து பேசி சென்னை நகருக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை நனவாக்கினார்.
இலவசகாலணி, இலவச வேலைவாய்ப்பு வழங்கினார். நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், வீட்டு வசதி, திருமண நிதி உதவி, நதி நீர்த் திட்டம், 20 அம்சத்திட்டம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, தொழிலாளிகளுக்கு உதவி, அரிசி விலை குறைப்பு போன்ற திட்டங்களை நடைமுறைபடுத்தினார்.
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமையவேண்டுமென்றும் அவர் விரும்பினார்.

Add a Comment