POST: 2018-06-26T09:41:18+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-247
—————

12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-8)

புயலோ புயல்
=============
[கவிஞர் த. கோவேந்தன்] ////////////////////////////////////////////////

புயலோபுயல் புயலோபுயல் புகுந்தாடிய தெங்கும்!
பொழியும்மழை சுழற்காற்றொடு பொங்கும்கடல் ஆடி
வயற்காடிலை தோப்பும்இலை துரவும்இலை, மேலும்
வாழும் உயிர், எவையும்இலை மாந்தர்இலை எனவே
புயலோபுயல் புயலோபுயல் புகுந்தாடிய தெங்கும்!

இயற்கை கொடும் சீற்றத்துடன் தென்னாட் டினில் ஆடி
இரக்கம் எனும் பண்பொன் றிலா அாக்கித்தனம் தன்னைத்
துயருக்கொரு முடிவெல்லையே இல்லைஎனச் சொல்லிச்
சுரண்டும்கொடு முதலாளியம் மேலாம்எனும் வண்ணம்
புயலோபுயல் புயலோபுயல் புகுந்தாடிய தெங்கும்!

வறுமைப்புயல் வந்தேறிகள் வாட்டும் துயர்ப் புயலால்
வாழ்வில்நலம் இழந்தோம் உயிர் வாழ்வை இழக் கிலமே,
சிறுமைப்புயல் சிதைவுப்புயல் மொழிப்பற்றிலார் ஆட்சி
சிதைத்தும்இனம் செத்தோம்இலை சிறப்போம் எனவாழ்ந்தால்
புயலோபுயல் புயலோபுயல் புகுத்தாடிய தெங்கும்!

மாடில்லையாம் மனையில்லையாம் மற்றும் பல இலையாம்
மனத்தின்துயர் புயல்பேய்மழை எனவே துடித்தேங்கக்
கேடில் உடன் பிறவாஉயர் மாந்தர்குடும் பங் கள்
கிளையோடிலை கேட்டோம் இதைக் கேட்டுக் கிடர் இலையோ ?
புயலோபுயல் புயலோபுயல் புகுந்தாடிய தெங்கும் !

ஒரு நாளிலை இருநாளிலை முந்நாளிலை அடடே
ஒயாப்புயல் ஊர்கள்உடல் புதையாப் பிணக்காடாய்
அருமாமணி நூல்கள் தமைக் குமரிக்கடற் கீந்த
அல்லற்கிணை அவலம்தனை இன்றும் அடைவண்ணம்
புயலோபுயல் புயலோபுயல் புகுந்தாடிய தெங்கும்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *