மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-249
—————
புரட்சித்தலைவர் தொடங்கிய
மக்களைச் சந்திக்கும் திட்டம் – (30.09.1977)
/////////////////////////////////////////////////////////////////////////////////
(பகுதி-1)
/////////////////
1. அன்றாடம் மக்களைக் கண்டு அவர் குறைகளை நேரில் கேட்டு ஆவன செய்யவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2. அரசாங்கம் என்றாலேயே – ‘காலத் தாமதம்’ என்ற கருத்து களையப்பட வேண்டும். நமது மதம் இந்து மதம், இஸ்லாம் மதம் என்பதல்ல – தாமதம் தான் நம்முடைய பெரிய மதம் என்பதைப் போக்கத்தான் இந்தத்திட்டம்.
3. முன்பெல்லாம் குறைகளைச் சொல்வதற்கே மக்களுக்குத் துணிவில்லாமல் அவர்கள் குரல் கம்மியிருந்தது. குறைகளைக் கூறுங்கள்! கோரிக்கைகளைத் தாருங்கள்! முறை செய்வதற்காக உங்கள் முன்னால் நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லும் இந்தத் திட்டம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நேர்முக உறவை, நேச உணர்வை வகுத்துப் பாசத்தைப் பற்றுணர்ச்சியை வளர்க்க உதவும்.
4. சொல்வது ஒன்று செய்வது இரண்டு என்று காட்டிக் கொண்டிருப்பது இந்த அரசு.
5. கேளுங்கள் கொடுக்கப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்! என்பதே இந்தத் திட்டத்தின் இலட்சியம்! கேட்பதையும் முறையோடு கேளுங்கள்! தட்டுவதையும் தகுதியோடு தட்டுங்கள் என்று சேர்த்துச் சொல்ல விரும்புகிறேன்.

Add a Comment