மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-254
—————
ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன் ! (பகுதி-4)
——————————————————————————
இரவு எட்டு மணிக்கு விண்வெளி வீரர்களுக்கு ராஜாஜி ஹாலில் தமிழக அரசின் சார்பில் ஒரு விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது.
பத்திரிகையாளர்கள் உள்படச் சுமார் 400 பேர் கலந்துகொண்டார்கள். விருந்தின் முடிவில் விண்வெளி வீரர்களுக்கு நினைவுப் பரிசாக நடராஜர் சிலையும், தஞ்சாவூர்த் தட்டும் வழங்கப்பட்டது. அவர்களின் திருமதிகளுக்குப் பட்டுப் புடைவையும், அவர்களின் குழந்தைகளுக்கு எச்.எம்.டி. கைக் கடிகாரமும் பரிசளிக்கப்பட்டது.
அப்போது, கலையரசி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். விண்வெளி வீரராக நடித்த காட்சி சுருளையும் திரையிட்டுக் காட்டினோம். மேலும், விழா பதாகையில், திருக்குறள் ஒன்றினை எழுதி வைத்திருந்தோம். அக்குறள்,
“ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து.”
அந்த குறளை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்த்து சொன்னபோது, அவர்கள் புரட்சித்தைலைவரை ஆரத்தழுவி மகிழ்ந்தபோது, புரட்சித்தலைவரும் என் முதுகைத் தட்டினார்.

Add a Comment