POST: 2018-07-05T07:36:18+05:30

தமிழக சட்டப்பேரவையில் 13.06.2018 (புதன் கிழமை) அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் இடம்பெற்ற மொழிபெயர்ப்புத்துறையின் கொள்கை விளக்க குறிப்பு
===============================================

மொழிபெயர்ப்புத் துறை
———————————————-

அங்கிங்கெனாதபடி எங்கும் மொழியாக்கப் பணியின் தேவை பெரிதும் வளர்ந்து தகவல் தொழில் நுணுக்கத்திற்குப் பெருந்துணையாக நிற்கிறது. மொழிபெயர்ப்பு இன்றி எதுவும் நடவாது என்பது ஆங்கில முது மொழியாகும்.

தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளின் செயலாளர்கள் / இணைச் செயலாளர்கள் / துணைச் செயலாளர்கள் வழியாக வரப்பெறுகிற கோப்புகளை ஆங்கிலம்-தமிழ், இந்தி-தமிழ், மலையாளம்-தமிழ், தெலுங்கு-தமிழ் போன்ற மொழிபெயர்ப்புப் பணிகளையும் இத்துறை செய்துவருகிறது. மேலும், அலுவல் நெறி மொழிபெயர்ப்புக்கெனவே இத்துறை முழு நேரப் பணியாற்றி வருகிறது.
மொழியாக்கப் பொருண்மை

· மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு
· மாண்பமை அமைச்சரவைக் கூட்டக்
குறிப்பு
· அரசிதழில் வெளியிடப்படும்
அறிவிக்கை
· சுற்றாணைக் குறிப்பு
· விசாரணை ஆணைய அறிக்கை
· தமிழ்நாடு மாநிலத் தகவல்
ஆணையத்தின் ஆண்டறிக்கை
· மாநில மனித உரிமை ஆணைய
அறிக்கை
· பொருளாதாரக் குற்றங்கள் குறித்த
ஆவணம்
· அரசாணை
· சுற்றறிக்கை
· காவலர் பதக்கங்களுக்கான தகுதியுரை
· தேர்தல் கையேடு
· பொதுக் கணக்குக் குழு மற்றும் பொது
நிறுவனங்கள் குழு அறிக்கை

சொல்லுகச் சொல்லைப் பிறிதோர்சொல்
அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
(குறள் 645)

மொழியாக்கத்தின் அளவையும் ஆழத்தையும் காட்டுகின்ற வகையில் அமைந்த இக் குறள் பொன்னேபோல் போற்றத்தக்கது.

அதன்படி, இத்துறை மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *