பகுத்தறிவுப் பேரொளி ஆசிரியர் அவர்கள் தம் ஆயிரம் அலுவல்களுக்கு நடுவில் என்னைக் காண வந்து என் உடல் நலம் பற்றி வினவியது உருக்கமாக இருந்தது.
எங்கள் குடும்பத்தாரையும் என் துணைவியாரின் குடும்பத்தாரையும் பல்லாண்டுகள் நன்கறிந்த பழக்கம் கொண்டவர்.
அந்த வகையில், நான் தஞ்சையில் பணியாற்றியபோது திங்களுக்கு ஒருமுறையேனும் என்னைக் காண வருவது அவருக்கு வழக்கமாக இருந்தது.
என் துணைவியாரை மணியம்மை பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு மருத்துவ நல்வாழ்வு அறிவுரைஞராக அமர்த்தியிருந்தார்.
அன்பு ததும்ப அவர் வந்துபோனது எனக்கு ஆறுதலாக இருந்தது.
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment