POST: 2018-10-12T09:16:55+05:30

===================================
உலக விருது பெற்ற ஒளிவிளக்கு
===================================

மருத்துவ உலகத்தின் மாபெரும் பெருமை கொண்ட டாக்டர்.இலலிதா காமேசுவரன், டாக்டர்.காமேசுவரன், டாக்டர்.மோகன் காமேசுவரன் ஆகிய மூவரும் தமிழகத்தின் மருத்துவ நல்வாழ்வை உயர்த்திய ஒப்பற்ற புகழ் கொண்டவர்கள்.

தாயின் புகழ், தந்தையின் பெருமை இரண்டையும் ஒன்றாக இணைத்து உலகம் பாராட்டும் சர்வதேச மனித நேய விருது 07.10.2018 அன்று டாக்டர்.மோகனுக்குக் கிடைத்திருப்பது எல்லையில்லாத பெருமிதத்தைத் தருகிறது.

அமைதியும், ஆற்றலும், அருமைப்பாடும் புதியன கண்டு அறிவிக்கும் மருத்துவ மாட்சியும் டாக்டர்.மோகன் காமேசுவரனின் தனி இயல்புகளாகும். உலக விருதுகள் அவரைத் தொடர்ந்து தேடி வரும்.

எங்கள் குடும்பத்தின் புகழாரங்களை, வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறோம் .

வாழ்க டாக்டர்.மோகன் காமேசுவரன்

வளர்க டாக்டர் மோகன் காமேசுவரத் தனிப்புகழ்.

———- பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *