POST: 2018-11-21T10:34:35+05:30

மகளிர் நல மருத்துவர் கனகா
===============================

நாங்கள் உறவாடிய குடும்பத்தில் புகழ்வாய்ந்த பெருமாட்டி மறைந்துபோனதை நினைந்து மனம் சோர்கிறது.

மகளிர் நல மருத்துவத்திலேயே மாபெரும் சிறப்புடையவராக நரம்பியல் அறுவை மருத்துவத் திலகமாக வாழ்ந்து பணியில் இருந்து ஓய்ந்து, பொதுப் பணிக்கு ஆட்பட்டு, முதியோர் நல மருத்துவ இல்லத்தை தொடங்கி நடத்தி பெரும்புகழ் பெற்றார்கள்.

என் துணைவியார் டாக்டர் தாரா அம்மையார் அவர்களின் வகுப்புத் தோழி. ஒருமுறை என் துணைவியார், கனகா அழைத்து திருப்பதி சென்று வந்தார்கள். அவர் நடத்திய முதியோர் இல்லத்தையும் சென்று கண்டு வந்தார்கள். தன் தந்தையார் பெயரால் நிறுவனம் நடத்துவதையும், இல்லம் நடத்துவதையும் தந்தைக்கு ஓர் ஆடவர் திலகம்போல் இருந்து மருத்துவத் துறைக்கு நரம்பியலுக்கு வரம்பில்லாத புகழையும், பெருமையையும் சேர்த்தவர்கள் மறைந்ததை உரிய வகையில் இந்து நாளிதழும், தமிழ் நாளிதழ்களும் செய்தி வெளியிட்டு தங்கள் புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

—– ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *