POST: 2018-12-28T08:37:53+05:30

வானம் வசப்பட்டதோ !
========================

காலப் புதுமையும் சீர்திருத்தச் சிந்தனையும் கலை நடம் புரிய எழுதி வந்த நண்பர் பிரபஞ்சன் மறைந்தது அவலத்துக்குரியது.

தமிழ்க் கல்லூரியில் பயின்றவர் என்றாலும் தம்மைக் கதை உலகத்துக்கே ஆட்படுத்திக் கொண்டவர்.

வரலாற்றுச் சாயலில் புதுமை மிளிர அமைந்த வானம் வசப்படும் பொதுவாகத் தமிழுக்கும் சிறப்பாகப் புதுவைக்கும் புகழ் சேர்த்த நெடுங்கதையாகும்.

தி .நகர் அலுவலகத்திலிருந்து ஐந்து மணியளவில் பீட்டர் சாலையிலுள்ள சரவண பவனில் தொடர்ந்து கண்டு வந்து மகிழ்ந்தோம்.

எழுத்தையே நம்பி வாழ்வது இன்றும் சிலருக்கே வெற்றி வாழ்வாக அமைகிறது.

மறைந்த போது மாநிலமே மதிப்பைத் தந்தது என்று நினைக்கும் போது அவர் வருந்திய போது இன்னும் பெரிய மருத்துவக் கண்காணிப்பை அரசு அளித்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *