அனைத்தும் கற்ற ஆற்றலரசி !
================================
நிறைவையும் பெருமகிழ்ச்சியும் வழங்கும் ஓர் இனிமையான செய்தி என்னை மகிழ்வில் திளைக்க வைத்திருக்கிறது.
மருத்துவக் கல்லூரி மாணவியாக இருந்தபோதே, மருத்துவ அறிவியல் பற்றிய கட்டுரையை மணக்கும் தமிழில் எழுதி முதற் பரிசு பெற்றதை நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
அன்று முதல் இன்று வரை அறிவுத் திறனையே நம்பி தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டு மருத்துவம், அறிவியல், கல்வி, இலக்கியம், சமயம் , பொதுத் தொண்டு முதலிய துறைகளில் ஏற்றம் பெற்று உயர்ந்துள்ள மருத்துவ மாணிக்கம் டாக்டர்.சுதா அவர்களின் பெயர் வந்தபோதே துணை வேந்தருக்கு இவரை விடத் தகுதியானவர் அமைய முடியாது என்று நண்பர்களிடம் சொன்னேன். அது நிறைவேறியது பெருமிதம் தருகிறது.
நேற்றுத்தான் ஒரு கூட்டத்தில் நாடறிந்த ஒருவரைச் செய்தித்தாள்கள் அனைத்தும் துணைவேந்தர் அமர்த்தம் பற்றிப் பாராட்டி எழுதியது, ஔவை நடராசனுக்குப் பிறகு இருபதாண்டுகள் கழித்து இன்று நிறைவேறி இருக்கிறது என்று டாக்டர் சுதா சேஷையனைப் பாராட்டிக் கூறினார். என் பெயர் இருந்ததால், நான் நாணணிந்து மகிழ்ந்தேன்.
அருமை டாக்டர் சுதா சேஷையன் தன்னையே நம்பி வாழும் தறுகண்மையும் ,திறமைப் பேரொளியும் கொண்டவர். கல்வி ,அறிவு,துணிவு என்றும் நின்று நிலைக்கும் டாக்டர்.சுதா சேஷையன் மருத்துவப் பல்கலைக்கழக மாட்சிக்கு அணி சேர்க்கும் ஆற்றலரசியாராக அமைய வாழ்த்துகிறேன்.
—– ஔவை நடராசன்

Add a Comment