POST: 2019-01-18T13:02:00+05:30

நாளிதழில் வெளியான கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
============================================
(வாழ்த்து – 98)

தமிழின் மிகச் சிறந்த இலக்கிய நூல்களை மொழிபெயர்த்த அருட்தந்தை ஜி .யு .போப்பின் முன்னுரையை மொழிபெயர்த்த முனைவர்.அருள் நடராசனின் ஆக்கம் மிக அருமை.

பல அரிய தகவல்களைத் திரட்டித் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளார்.

கலைமகள் இதழ் இலக்கியத் தகைமை வாய்ந்த ஏடு, அதில் கட்டுரை வருவது பெருமைக்குரியதாகும்.

உங்கள் புலமைக்கு அது அணி சேர்க்கிறது.
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்றும் புறநானூற்றுப் பாடலை மொழிபெயர்ப்பதை ஜி .யு .போப் வழக்கமாகக் கொண்டிருந்தார் .
அருட்தந்தையின் ஆளுமையினை இலக்கிய இலக்கணத்தின்பால் அவர் கொண்டிருந்த தணியாத வேட்கையை தமிழில் உள்ள அறநூல்களை மொழிபெயர்த்து அறிந்ததையும் பண்டைத் தமிழர் தம் வாழ்வில் மேற்கொண்ட அறக்கோட்பாடுகளைப் பற்றியும் உலகம் முழுவதும் அறியச்செய்த அருட்தந்தைக்கு அஞ்சலியைத் தங்கள் தமிழாக்கம் நிறைவேற்றியிருப்பது மிகமிக அருமை.
திங்கள்தோறும் தாங்கள் இத்தகைய ஒரு மொழிபெயர்ப்பினை எழுத வேண்டுமென்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.
தங்கள் பணி தொடர வேண்டும் , எனக்குப் புத்தாண்டுப் பரிசாகத் தங்கள் கட்டுரை அமைந்தது.

ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்களையும் பாராட்டுகிறேன்.

ஒளவை அருளின் பணியும் புகழும் ஓங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

—– மருத்துவர்.ஜ.பத்மாநந்தன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *