=மூளைக்குள் சுற்றுலா – பயணம் தொடங்கியது
===================================
அரசின் தலைமைச் செயலாளர் தகைமையில் தமிழக அரசுக்கு அணி செய்துவரும் அறிஞர் இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற நூலை நானும் என் துணைவியாரும் இணைந்து எழுத்தொன்றும் எண்ணிப் படித்து வருகிறோம்.
அறிவுத்திரையின் அடுக்குகள் பலவற்றை ஆராய்ந்து அறிந்த ஒப்பற்ற திறமை கொண்ட அறிஞர் இறையன்பைப் பற்றிய அறிமுகத்தை என் நண்பர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.
இனிமேல், இப்படி ஓர் அறிமுகத்தை – முழுமுகத்தை , எவராலும் எழுத முடியாது. அறிமுக வரைவுக்கு இதுதான் இலக்கணம். மூளைக்குள் சுற்றுலா ஒப்பிலாத நூல் . கல்லூரி மாணவர்கள், மகளிர் ,பொது வாழ்வினர், முதுமையினர் முதலிய அனைவரும் ஒருமுறையேனும் இந்நூலைப் படித்து வாழ்க்கையில் நாம் அறியாதவற்றை அறிந்துகொண்டோம் என்ற நிறைவைத் தரும். இந்நூல் சிகரத்தைத் தொடுகிறது.
இப்போது அறுபது பக்கங்களைத் தான் படித்து முடித்திருக்கிறோம் .
என் துணைவியார், மருத்துவராக இருப்பதால், அவர் ஒவ்வொரு சொல்லின் மொழியாக்கத்தையும் கண்டு பெரிதும் உருகினார்.
தொடர்ந்து இந்நூல் பற்றி எழுதி வருவேன்.
—– ஔவை நடராசன்

Add a Comment