POST: 2019-02-21T08:28:34+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 259)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..

(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 6)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)

4. பிற மொழி இலக்கியப் படைப்புகளைத் தமிழாக்கம் செய்தலும், தமிழ் இலக்கியம் மற்றும் உயர் ஆய்வுப் படைப்புகளைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தலும்.
5. ஓலைச்சுவடி மற்றும் அரிய கையெழுத்துச் சுவடிகளைப் பாதுகாத்தலும் அவற்றைப் புத்தகங்களாக வெளியிடுதலும், 6. கல்வெட்டு மற்றும் பட்டயங்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்து அவற்றை அச்சிடுதல், அவற்றிலுள்ள செய்திகளைக் கொண்டு தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு எழுதுதல்.
7. தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளில் வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்கள், பேச்சு வழக்குகள் வட்டார வழக்குகள், தொழிலியல் மற்றும் வேளாண்மைக் தொடர்புள்ள சொற்கள் ஆகியவற்றைத் தொகுத்துப் பாதுகாத்தலும், அச்சிட்டு வெளியிடுதலும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *