POST: 2019-03-03T09:51:30+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 267)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 14)
***************************************************************

8. தமிழ்ப் பல்கலைக் கழகம் அதன் கொள்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்திற்குப் பல்வேறு புலங்களின் சிறப்புத் துறைகளின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப் பத்தாண்டிற்கான கருத்துரு அனுப்பியுள்ளது. இதில் கணினி வழி மொழி ஆய்வு மற்றும் மொழி கற்பித்தல், நில அறிவியல், சமுதாய அறிவியல், தமிழ் நாடகம், இசை வளர்ச்சி மற்றும் மொழி பெயர்ப்பியல் தொடர்பான ஆய்வு வரையறைகள் இடம் பெற்றுள்ளன.

எட்டாவது உலகத் தமிழ் மாநாடு
தமிழகத்தின் பெருமையினைத் தரணி எங்கும் பரப்பும் விழாவாக எட்டாவது உலகத் தமிழ் மாநாடு சனவரித் திங்கள் முதல் நாள் தொடங்கி ஐந்தாம் நாள் வரையில் தஞ்சாவூரில் சீரும் சிறப்புமாக நடைபெற்றதை இம்மாமன்றத்தின் உறுப்பினர்கள் யாவரும் நன்கறிவர்.

2. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளைவிட, இம் மாநாட்டில் 23 நாடுகளிலிருந்து பேராளர்களாகவும், பார்வையாளர்களாகவும் 1101 அறிஞர்கள் கலந்துகொண்டனர். தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் நேர்த்தியாகக் கட்டி முடிக்கப்பட்ட பெரியதொரு மாநாட்டு அரங்கத்தில் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் தொடங்கியது அனைவராலும் பாராட்டப்பட்ட சிறப்பம்சமாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *