============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 273)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
================
17. Agro Service Centre – வேளாண்மைப் பணி மையம், வேளாண் பணி நடுவம்
18. Air-Conditioner – வளிச்சீர்மை, காற்பதனி, குளிர்பதனி, சீர்வளி
19. Air Pillow – வளியணை, காற்றுத் தலையணை
20. Airport – வான்திடல், வானூர்தி நிலையம்
21. Alarm Time Piece – அலறிக்கடிகாரம், அலறி, மணி அலறி, அலறி/அதிர் மணிப்பொறி
22. Aluminum Vessel Store – அளமியக்கலப் பண்டசாலை, அலுமினியப் பாத்திரக் கடை
23. Ambulance – மருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி
24. And Sons – மற்றும் மகன்கள்
25. Antenna – கவர்க் கம்பி
26. Arcade – நடைவானப் பந்தல்
27. Arch – வில் வளைவு, வளைவு
28. Artisan – கைவினைஞர், கைத்திறத் – தொழிலாளர், கம்மியர்
29. Artist – கலைஞர், கவின் கலைஞர், ஓவியர்
30. Art Prints – கலை அச்சீடுகள், கலை அச்சுக்கள், கவின் அச்சுக்கள்
31. Arts – கலையகம், கலை, கலைக்கூடம், கலைத்துறை
32. Art Service – கலைப்பணி
33. Asbestos – கல்நார்
34. Assistant – உதவியாளர்
35. Associates – கூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர்
36. Audition – கேட்டாய்தல், கேட்டல்
37. Auditor – தணிக்கையாளர், கணக்காய்வாளர்
38. Auditorium – கலையரங்கம்
39. Audio Cassette – ஒலிப்பேழை, ஒலிநாடா
40. Audio Centre – கேட்பொலியகம், கேட்பொலி நடுவம், ஒலியகம், ஒலிநாடா மையம்
41. Auto Lining – தானி- வரிப்பீடு
42. Automatic Watch – தன்னியக்க மணிப்பொறி, தானியக்கக் கடிகாரம்
43. Automobiles – தானியங்கிகள், தானியங்கிகள் வினையகம்
44. Autorickshaw – தானியங்கிபவை, தானி, தானியங்கி
45. Auto-Service – தானிப் பணியகம்
46. Auto Spare Industries – தானி உதிரியுறுப்புகள் தொழிலகம், தானி உதிரிப் பொருள்கள்
தொழிலகம்
47. Auto-Spare Parts – தானி உதிரியுறுப்புகள் தொழிலகம், தானி உதிரிப் பொருள்கள் தொழிலகம்
48. Auto-wings – தானி – சிறகம்
49. Avenue – நிழற்சாலை, கவின்பாதை,
மரம் பயில் சாலை, அகல் கவின்பாதை
50. Bakers & Confectioners – அடுமனைஞர் மற்றும் தின்பண்ணடங்கள், வறட்டப்பங்களும் தின்பண்டங்களும் செய்பவர்

Add a Comment