============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 276)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
===============
106. Cassette – பேழில், பேழை, நாடா, ஒலிப்பேழை
107. Ceiling Fan – முகட்டு விசிறி
108. Cellular telephone – செல்லிடப் பேசி
109. Cement – பைஞ்சுதை, பசுஞ்சுதை, பசுங்காரை, பசைமண்
110. Centre – நடுவம், மையம்
111. Chalan – அக இதழ், செலுத்துச் சீட்டு
112. Chalk Industries – சுண்ணக்கட்டித் தொழிலகம்
113. Chemicals – வேதுப் பொருள்கள், வேதியப் பொருள்கள்
114. Chicken Centre – கோழியிறைச்சி மையம், கோழியிறைச்சிக் கடை
115. Chicken Soup – கோழி வடிசாறு, கோழிச்சாறு
116. Chit Fund – சீட்டு நிதியகம், சீட்டுக்குவையகம்
117. Chordless telephone – கைப்பேசி
118. Club – மன்றகம், சங்கம், விடுதி, உணவகம்
119. Clinic – மருத்துவகம், மருத்துவ அகம், மருந்தில்லம்
120. Coffee Filter – குளம்பி வடிகட்டி, காப்பி வடிகட்டி
121. Coffee House – குளம்பியகம், காப்பி நிலையம்
122. Coffee Mart – குளம்பித்தூள் அங்காடி, காப்பித்தூள் கடை
123. Coil Industries – சுருளைத் தொழிலகம், சுருள் தொழிலகம், மின்கம்பிச் சுருளகம், சுருள் கம்பித் தொழிலகம்
124. Coir Industries – கயிற்றுத் தொழிலகம்
125. Collections – திரட்டுகள், தண்டல்கள்
126. Colour Lab – வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம், வண்ணப்பட ஆக்ககம்
127. Colours – வண்ணங்கள், நிறங்கள்
128. Compact Disc – பதிவு வட்டு
129. Company – குழுமம், வணிக நிறுவனம்
130. Complex – வளாகம்
131. Compound – அரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
132. Computer Centre – கணினி மையம், கணிப்பொறி மையம், கணினி நடுவம்
133. Concrete Works – திண்காரைப் பணியகம்
134. Condensed Disc – செறி தட்டு, செறி தகடு
135. Cone Ice Cream – கூம்புப் பணிகம்
136. Confectioners – திண்பண்ட விற்பகம், நொறுவல் விற்பவர்கள்
137. Constructions – கட்டுமானங்கள்
138. Consultant – கலந்துரைஞர், தகவுரைஞர், உறுபொருள் உரைப்பவர்,
உசாக்கையர்
139. Containers – கொள் கலம்
140. Contractor – ஒப்பந்தகர், ஒப்பந்தக்காரர்
141. Constructor – கட்டடம் கட்டுநர்
142. Cooker – பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமையல் கலம், சமைகலம்
143. Cool Drinks – குளிர்பானங்கள், தண்ணருந்தகம், குளிர் குடிநீரகம்
144. Corporation – கூட்டிணையம், நிறுவகம், நிறுவனம், கூட்டகம், கூட்டு நிறுவனம், மாநகராட்சி
145. Cottage Industries – குடிசைத் தொழிலகங்கள், குடிசைத் தொழில்கள்
146. Counter – எண்ணகம், செயலறை, கல்லா, செலுத்துமிடம்
147. Courier – தூதஞ்சல்
148. Covering – புனைவு அணி, முலாமிட்ட, முலாம் பூசிய, மேலிடு
149. Crackers – பட்டாசுகள், வெடிகள்
150. Crafts – கைத்தொழில்கள்

Add a Comment