============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 277)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
===============
151. Departmental Store – பாகறைப் பண்டகம் – பல்பொருள் அங்காடி
152. Deposit – இட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு, வைப்புத் தொகை
153. Depot – கிடங்ககம், கிட்டங்கி, கிடங்கு, பணிமனை
154. Designers – வடிவமைப்பாளர்
155. Detergent – சலவைப் பொருள்
156. Die Castings – அச்சு உரு வார்ப்புகள்
157. Digital Watch – எண் கடிகை
158. Distilleries – துணிவடிமனை, வடிசாலை, வடிமனை
159. Drinks – பருகுணா, குளிர்பானம், பானங்கள், குளிர் குடிநீர்மங்கள்
160. Dress Makers – ஆடை ஆக்குநர், ஆடை தயாரிப்பாளர்
161. Dress Paradise – ஆடை உலகம், உடை நிறையகம், ஆடையகம்
162. Druggists – மருந்தாளர்கள்
163. Drug Stores – மருந்துப் பண்டகம், மருந்துக் கடை
164. Dry Cleaners – உலர் வெளுப்பாளர், உலர் சலவையகம்
165. Duty Paid Shop – தீர்வை செலுத்தப்பட்ட பொருள் விற்பனைக் கடை
166. Dye – சாயம்
167. Dyeing – சாயப்பூச்சு, சாயம் தோய்த்தல்
168. Dye-Stuff – சாயப் பொருள்
169. Dye-Works – சாயத் தொழிலகம்

Add a Comment