============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 278)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
===============
170. Cushion – மெத்தியம், மெத்தை
171. Cut Piece Centre – விடுதுணியகம், வெட்டுத் துணியகம், துண்டுத் துணிக்கடை
172. Cycle Company – மிதிவண்டிக் குழுமம், மிதிவண்டி வாடகைக் கடை
173. Cycle-Mart – மிதிவண்டி அங்காடி, மிதிவண்டி விற்பனை நிலையம்
174. Cycle rickshaw – மிதியிழுவண்டி
175. Cycle rickshaw manufacturers – மிதியிழுவை உருவாக்கம்
176. Cylinder Press – உருளைணச்சகம்
177. Data Processing – விவர வகைப்பாடு, தகவல் / செய்தித் தொகுப்பகம்
178. Dealers – விற்பகர், விற்குநர்
179. Decorators – அணி செய்பவர், அழகுபடுத்துநர்
180. Deluxe Centre – சொகுசு நிலையம்
181. Dental Clinic – பல் மருத்துவமனை
182. Dentist – பல் மருத்துவர்
183. Edible Oil – உண் எண்ணெய், சமையல் எண்ணெய்
184. Electricals – மின்பொருளகம்
185. Electronics – மின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
186. Embroidery – பூத்தையல், தையல் வேலைப்பாடு
187. Emporium – மளிகையகம், கலையகம், விற்பனைப் பெருநிலையம், வணிக நடுவம்
188. Emulsion – பால்நிறக் குழம்பு, பால்மம், பசைக்குழம்பு
189. Enclave – வளாகம்
190. Engineer – பொறிஞர், பொறியாளர்
191. Engineering Industries – பொறியியல் தொழிலகம்
192. Enlarger – பெரிதாக்கும் கருவி, விரிக்கி, விரிவாக்கி
193. Enterprises – முனைவகம், வணிக நடுவம், முயற்சியகம்
194. Essences – சாரங்கள், நறுமணச் சாரங்கள், சாறுகள், நறுமணப் பொருள்கள்
195. Ever Silver – நிலைவெள்ளி, எவர்சில்வர், கறுக்கா வெண்தகடு
196. Exhaust Fan – உறிஞ்சு விசிறி, காற்றுப்போக்கி
197. Explosive – வெடிமருந்து
198. Export – ஏற்றுமதி
199, Fabricators – கட்டமைப்பாளர்
200. Factory – தொழில் மனை, தொழிலகம், தொழிற்சாலை

Add a Comment