============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 280)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சொற் பட்டியல்
===============
221. Fluorescent Lamp – பாதரச ஆவி விளக்கு, இதன் ஆவிவிளக்கு
222. Fluorescence – ஒளி வண்ணம், ஒளிர் வண்ணம்
223. Foam Pillow – நுரையணை, நுரைத் தலையணை
224. Folding Furnitures – மடக்கு அறைகலன்கள்
225. Footwears – தாளணிகள், தாளணியகம், மிதியடியகம், காலணியகம்,
தொடுதோல் அணிகள் நிறுவனம்,
226. Foundation – அடித்தளம்
227. Foundry – வார்ப்பாலை, வார்ப்பகம், வார்ப்படச் சாலை,
வார்ப்புக் களம்
228. Frame Works – படச்சட்டப் பணிமனை, படச்சட்டக் கடை
229. Framer – படச் சட்டமிடுபவர்
230. Fruit Juices – பழச்சாறுகள், பழமுதிர்சோலை
231. Furniture Mart – அறைகலன் அங்காடி, வீட்டு வசதிப் பொருள்கள்,
அறையமர்வுப் பொருளகம்
232. Garments – உடை வகைகள் (ஆடை)
233. Gas – எரி ஆவி, எரிவளி
234. Gas Welding – ஆவிப் பற்றவைப்பு
235. General Stores – பல்பொருள் அங்காடி
236. Gift House – பரிசுப் பொருளகம் (இல்லம்)
237. Ginning Factory – பஞ்சாலை, பஞ்சுப் பிரிப்பகம்
238. Godown – கிடங்கு, கிட்டங்கி
239. Gold Refineries – தங்கத் தூவடியாலை, தங்கத்தூய்மை ஆலை, பொன்
தூய்மை செய்யுமிடம்
240. Granites – கருங்கற்கள், கிரானைட் கற்கள், – கருங்கல் சல்லிகள்

Add a Comment