POST: 2019-03-25T10:08:14+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 281)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சொற் பட்டியல்
===============

241. Graphics – எழுத்து வரைகலை
242. Grille Works – இரும்புக் கிராதிகள், வலைத்தட்டித் தொழிலகம்
243. Grinder – திரிகைக்கல், அரைப்பான், இயந்திர ஆட்டுக்கல்,
அரைக்கும் கருவி
244. Grindery – சாணை பிடிக்கும் இடம்
245. Groceries – பலசரக்கு
246. Group of Companies – குழுமத் தொகுதி, வணிக நிறுவனத் தொகுதி
247. Guest House – விருந்தகம், விருந்தில்லம், விருந்து மனை, விருந்தினர்
மாளிகை / இல்லம்
248. Hair Dresser – முடி திருத்துபவர்
249. Hair Stylist – முடி ஒப்பனையாளர்
230. Hall – மன்றம், கூட்ம், அரங்கம்
251. Handicrafts – கைத்திறவினைகள், கைவினைப் பொருள்கள்,
கைத்திறவினையகம்
252. Handloom – கைத்தறி
253. Hardwares – வன்மாழைகள், வன்மாழையகம், வென்சரக்கு,
இரும்புக் கடை, வன்பொருளகம்
254. Hatchery – குஞ்சு பொரிப்பகம்
255. Headlight – முகப்பு விளக்கு
256. Health Centre – நல் மையம், நல்வாழ்வு நிலையம், நல் நடுவம்
257. Hire – வாடகை
For Hire – வாடகைக்காக | வாடகைக்கு
258. Hi-tech Industries – உயர் – தொழில்நுட்பத் தொழிலகம் (தொழில் நுட்பம்)
259. Holiday resort – விடுமுறை ஓய்வகம்
260. Home – அகம், இல்லம், வீடு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *