நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 105)
தமிழை வளர்க்க…
*****************************
ஔவை அருள் எழுதிய ‘தொல்காப்பியரைத் தொழுவோம்!’ என்ற துணைக் கட்டுரை படித்தேன். தொல்காப்பியம் நம்மோடு கலந்திருப்பதற்கு, நிகழ்காலத்துக்கான ‘இதோ வந்துவிட்டேன்’ என்ற சொற்றொடரை இறந்த காலத்தில் சொல்லும் வழக்கமே சான்று எனக் கட்டுரையாளர் சுட்டியிருப்பது சாலப் பொருத்தம். தமிழ்ச் சான்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தொல்காப்பியருக்கு மெரீனாவில் சிலை அமைத்துத் தந்த தமிழக அரசுக்கு பாராட்டுகள். சிலை அமைத்து அவர் செய்யுளை மேற்கோளிட்டுக் காட்டுவதோடு நில்லாமல், தொல்காப்பியரால் வளர்ந்த தமிழை மேலும் வளர்க்கப் பாடுபடுவோம்.
—– ப.தாணப்பன்,
தச்சநல்லூர்.

Add a Comment