உதிர்ந்த மலர் !
================
காண்பவர் கண்களுக்கு எரிச்சலூட்டும் திரைப்படங்களைத் தந்து காலம் கழிந்தால் போதும் என்ற கருத்துடையவர்கள் பலராக மிளிரும் திரையுலகத்தில் நடைமுறை அவலத்தைக் கூட கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்டி நினைவுகளை நெருடவைத்த திறனாளர் நண்பர் மகேந்திரன் .
இயக்குநர் மகேந்திரன் என்ற தொழிற்பெயரோடு சிந்தனை வாணராக வாழ்ந்தவர் மகேந்திரன்.
மேடைகளில் என்னோடு இரண்டுமுறை பங்கு பெற்றிருக்கிறார் .மகேந்திரன் எண்ணங்களில் இலக்கியம் இழையோடியது .
அறிவுச் சிந்தனையோடு அழகோவியங்களைப் படைத்துக் காட்டிய
ஆற்றல் இன்றோடு அணைந்து விட்டது .
எண்பது வயது எவரும் எட்டுகிற வயது தான் , காலம் அவரைக் கவர்ந்து விட்டது .
மலர் உதிர்ந்துவிட்டது.
முள் மட்டும் நம்மை அதிர வைக்கிறது.
இயக்குநர் மகேந்திரன் தன் கற்பனை ஆற்றலையும் கலைத் திறமையையும்
இளைய தலைமுறையினருக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை
ஜான் மகேந்திரன் வழியாக எதிர்பார்க்கலாம். ஆறுதல் அடைகிறேன் .
—– ஔவை நடராசன்

Add a Comment