POST: 2019-04-25T09:58:48+05:30

தமிழ்ச்சுடர் தா.கு.சுப்பிரமணியன் மறைவு !
=========================================

குள்ள உருவம் தான் குலுங்கி குலுங்கி நடப்பதோடு நகைச்சுவை நலம் கனிந்த தன் உரை வீச்சால் பட்டி மண்டபங்களுக்கு பாகும் பழமுமாக இனிப்பூட்டிய சொல்லருவி தா.கு.சுப்பிரமணியனை இந்த வயதில் இழப்பது நம் மனத்தை பெரிதும் நொந்து போகச் செய்கிறது.

மாணவப் பருவத்தில் இருந்து அவரைக் கண்டு மகிழ்ந்தவன். கம்பர் மேடைகளில் அவரைக் கண்டு குளிர்ந்தவன்.

சௌராஷ்ட்ர நன்மணிகளுள் ஒரு பொன்மணியை இழந்து விட்டோம்.

ஆழ்வார் பாடல்களை இசைப்பதும் அங்க அசைவுகளுடன் நடிப்புத் துடிப்புகளுடன் பேச வல்லவர் யார் ?

நேத்திரம் கெட்டவன் காலன் – தன்முன்
.. நேர்ந்த(து) அனைத்தும் துடைத்து முடிப்பான்.

என்று ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *