POST: 2019-04-26T09:15:28+05:30

ஆவண அறிஞர் எஸ்.முத்தையா மறைவு !
==========================================

அறிஞர் முத்தையா உடன் நான் சில அறிவரங்கங்களில் உரையாடியிருக்கிறேன்.

எந்த நுணுக்கத்தையும் வரலாற்று இணக்கத்தோடு சேர்த்து எழுதிய இதழியல் வித்தகர் திரு.முத்தையா அவர்களால் தான் நகரத்தார் கலைச்சிறப்பையும் , சென்னை மாநகரின் பழமைச் செழுமையையும் நாடறிந்தன.

சீகன் பால்கு பற்றி எழுதிய குறிப்பில் என் பெயரைக் குறிப்பிட்டு அவர் நினைவு கூர்ந்தது என்னை சிலிர்ப்படையச் செய்தது. அறிஞர் முத்தையாவின் சீடர்களாவது சிலர் வாழ்ந்து வளர வேண்டும்.

இலங்கையில் கொழும்பு நகரில் அவர் பணியாற்றியபடி ஆங்கில இதழை அணி செய்ததை இலங்கைத் திறனி திரு.சிவகுமார் பலமுறை நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தில் கனிந்த கனி வீசிய காற்றில் உதிர்ந்து விட்டது.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *