POST: 2019-07-08T11:04:13+05:30

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நிறைவு பெறும் நாளில் அடுத்த மாநாடு நிகழ்வதைப் பற்றி அறிவிப்பது வழக்கம்.

அந்த நிலையில் பேராசிரியர் அரங்க.பாரி முன்மொழியப் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அழகுற நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.

பாரியின் அழைப்பு பாரெங்கும் உள்ள தமிழர்களுக்கு உணர்வூட்டியுள்ளது .

சீரோடும் சிறப்போடும் சிந்தை மகிழச் செவி குளிர கலை இலக்கியப் பண்பாட்டுக் கதம்பமாக இப்போது முடிந்திருக்கிறது, என்று என் மகன் ஒளவை அருள் அனுப்பிய செய்தியைக் குறிக்க விரும்புகிறேன்.

ஆர அமர அமைதியாக அலைவில்லாத மனத்தோடு, எவரும் செலவு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அமைச்சர் காட்டிய வழிகாட்டு விரைவால்தான் அமெரிக்க நுழைவுப் பதிப்பைப் பெற முடிந்தது என்று பலர் பாராட்டினர்.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *