நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் !
===============================================
(வாழ்த்து – 168)
அன்புள்ள அண்ணா,
வணக்கம்.
தாங்கள் மிகுந்த அக்கறையோடு செம்மொழி நிறுவனம் குறித்து எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். நன்றி. தமிழறிந்த முழுநேர இயக்குநர் நியமித்தால் அன்றி வழி பிறக்க வாய்ப்பில்லை. மூன்றாண்டுகளாக நிறுவனம் பதிவாளர், நிதி அலுவலர் இல்லாமல் இருக்கிறது. மைய அரசும், மாநில அரசும் அக்கறை காட்டத் தமிழார்வலர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். யான் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
—– தெ.ஞானசுந்தரம்,
துணைத் தலைவர்,
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்.

Add a Comment