நிலவைத் தொட்ட நிகரில்லாத நாள் (20.07.1969) (பொன்விழா ஆண்டு)!
========================================
கணக்கும், தொழில் நுணுக்கமும், அறிவியல் கண்டுபிடிப்பும் ஒன்றாக இணைந்தால் நம் கருத்துக்கு எட்டாத கனவுகளும் கூட கண்முன்னால் நிறைவேறும்.
” ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து ” . (குறள் 353)
என்ற திருக்குறள் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. திருவள்ளுவர் அறிவியல் தெரிந்து கூறினார் இல்லை. பொதுவாக அறிவுத் தெளிவுக்கு இப்படிக் கூறி இருக்கலாம்.
இன்றைய நாள் நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினர் நிலவைத் தொட்டு ஐம்பதாண்டுகளின் வரலாற்றுப் பொன்னேடாக நிலவுகிறது. அவர் வழியைத் தொடர்ந்த திரு .இராகேஷ் சர்மா சென்னை வந்த போது புரட்சித்தலைவர் மகத்தான வரவேற்பு அளித்ததும், பொன் வேய்ந்த திருக்குறள் நூலைப் பரிசாக அளித்ததும் என் நினைவை விட்டு நீங்கவில்லை.
“ஆம்ஸ்ராங்கே, ஆம்ஸ்ராங்கே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா”
புரட்சித்தலைவரின் திரைப்படத்தில், இந்த விண்வெளி சாதனையைப் போற்றும் வகையில் அவர் பாடும் பாடல் இன்றும் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.
நீல் ஆம்ஸ்ராங் நிலவில் கால் வைத்தவுடன் உதிர்த்த வாசகம்,
“A small step for a man, A gaint lead for mankind”
….. முனைவர் ஔவை நடராசன்

Add a Comment