அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
&
தமிழ் இசைச் சங்கம்
இணைந்து நடத்தும்
காலந்தோறும் தமிழிசை
***************************
சிறப்புக் கருத்தரங்கு
அமர்வு -1
—————
தலைமை :
************
முனைவர் ந.அருள்
நாள் : 21.08.2019, காலை 10.45 மணி
———-
இடம்: இராசா அண்ணாமலை மன்றம்,
——— சென்னை.
நிகழ்ச்சியில் ஆற்றிய உரை
…………………………………………………..
கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இலக்கியம் பயில்வோர் இசையத் துணைப்பாடமாகப் பயிலவும் பாடஅமைவுகள் உருவாக வேண்டும்.
வானொலி, தொலைக்காட்சியில் தமிழிசைப் பாடல்கள் முறையாகப் பயிற்றுவிக்க ஆவன செய்தல் வேண்டும்.
தமிழிலக்கியக் கல்விக்கும் இசைப்புலமைக்கும் இயைபு உருவாவதோடு இசையியலுக்கும் இசைக்கலைக்குமிடையே நீங்கா உறவு அமைய வேண்டும்.
இந்நிலையில் நுண்ணாராய்ச்சியாகத் திகழும் இப்பண்ணாராய்ச்சியை நடத்திவரும் பெருமக்களைத் தமிழுலகம் என்றும் நன்றியோடு போற்றும்.
உலகில் மொத்தமுள்ள 195 நாடுகளில்,136 நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தாங் கள் வாழுகின்ற நாடுகளில் தமிழ்ச்சங்கங்களைத் தோற்றுவித்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் சார்ந்த விழாக்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி,தங்களுக்கும் தங்களது தாய்மொழியான தமிழுக்கும் உள்ள மரபுறவை உயிர்ப்போடு தக்கவைத்துக் கொள்கின்றனர்.
பண் என்பதனை இக்காலத்தில் இராகம் என்றழைக்கின்றோம். 11,991,ஆதியிசைகளையும்கொண்டது.
வண்டின் ரீங்காரத்திலிருந்து பிறந்தது குரல்; அதுவே சட்ஜமமாயிற்று. கிளியின் மிழற்றலில் பிறந்தது துத்தம்; அதுவேரிஷபமாயிற்று. குதிரையின் கனைத்தலை ஒத்தது. கைக்கிளை;அதுவே காந்தாரமாயிற்று. யானையின் பிளிறல் போன்றது உழை; அதுவே மத்திமமாயிற்று. மயிலின் அகவல் போன்றதுஇளி; அதுவே பஞ்சமமாயிற்று. பசுவின் கதறலில் பிறந்தது விளரி; அதுவே தெய்வதமாயிற்று. ஆட்டின் கத்தலில் பிறந்தது தாரம்; அதுவே நிஷாதமாயிற்று.
‘சரிகமபதநி’ என்ற ஏழும் வெறும் குறியீடுகள் என்றே வடநூலாசான்கள் சிலரும் ஒப்புவர். ஆனால், உயிரெழுத்துக்களின்ஏழு நெட்டெழுத்துக்களைக்கொண்டே ஆதித் தமிழிசை இயங்கியிருக்கிறது.
“ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும்
இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக்குரிய” என்ற சேந்தன் திவாகரம் இந்த உண்மைக்கு உறுதியூட்டும்.
‘பண்ணமை முழவு’ என்பதும் “யாழும் குழலும் ஏங்கிய மிடறும்” என்பதும் இளங்கோவடிகளால் அரங்கேற்று காதையில் ஆளப்பெறுகின்றன. தோற்கருவி – முழவு; துளைக்கருவி – குழல்; நரம்புக்கருவி – யாழ். இந்த முக்கருவிகளும் தமிழ்க் கருவிகளே. இந்த மூன்று கருவிகளின் பெயர்களிலும் தமிழுக்கே உரித்தான சிறப்பு ‘ழ’கரம் பயின்று வருவதொன்றே அதற்குச் சான்று.
காலந்தோறும் இசை எத்தகைய கோலங்களைக் கொண்டது என்பது பற்றி நடக்கும் கருத்தரங்கம் இது.
திரண்டு வந்திருக்கும் உங்களை வாழ்த்துகிறேன்.
ஆர்வத்தோடு இசைவேரை ஊன்றி வளர்த்த அண்ணாமலை அரசர் மன்றத்திலேயே இந்த விழா நடைபெறுகிறது .
எழுத்தாளர் மன்றம் புகழ்வாய்ந்த மன்றமாகும் .
அண்ணன் பெரியண்ணன் திருக்குறள் நெறிஅண்ணன் ஆவார்.
உழுதுண்டு வாழ்வார் என்பது போல எழுதுண்டு புகழ் பெரும் எழுத்தாளர்களுக்கு மன்றம் அமைத்தது பெருமைக்குரியதாகும்.
காலந்தோறும் என்ன கணந்தோறும் உலகமும் வாழ்வும் மாற்றங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன .
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ,என்ற நிலையையும் கடந்து நிகழ்காலத்தையே இக்காலம் ,தற்காலம் ,
இசைக்கருவிகள் உழலும் ,யாழும் ,முழவும் என்றுதான் குறிப்பிட்டார்கள்.
பிரிக்க முடியாத இசைக்கருவியாக அயல்நாட்டு கருவியான பிடில் ,வயலின் கருவி இல்லாத இசையே இல்லை.
இசை பெரிதா – இசைக்கருவிகள் பெரிதா என்று சொல்ல முடியவில்லை .
ஆர்மோனியப் பெட்டியோடு இசைந்து இப்போது ஆயிரம் இசைக்கருவிகள் தாண்டி இளையராஜாவும் ,ரகுமானும் ஏற்றம் பெற்றிருக்கிறார்கள் .
பாடல் தேவையில்லை பத்து இசைக்கருவிகள் இருந்தால் போதும் ஏழு எட்டு சொற்களை இணைத்தால் போதும் என்ற காலம் வந்துவிட்டது .
நல்ல இசை காதுக்கு இன்பம் தருவது மட்டுமல்ல .கால் தட்டுக்கும் இசைய வேண்டும்.
அமர்ந்து திரிந்த காலம் பொய் அலைந்து திரிந்து ஓடி ஆடி பாடவேண்டும் என்று காலம் மாறியிருக்கிறது.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தியத் துணை கண்டம் முழுவதிலும் ஒரே இசை முறை தான் நிலவி வந்திருக்கிறது. அது தான் தமிழ்நாட்டு இசை முறை. அது தான் இன்று கர்நாடக இசை என இன்று வலம் வருகிறது. சர் ஜான் மார்ஷல் என்ற ஆங்கிலேயரின் சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின் அடிப்படைச் செய்திகள் நம் தமிழிசையை நிறுவுகின்றன. மொகஞ்சதாரோ, அரப்பாவில் வெண்கலத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்டுள்ள நடனப் பெண்ணின் சிற்பம் வியக்கத் தக்கதாகும். சிந்துவெளித் தமிழர்கள் இசையிலும் நடனத்திலும் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே கடைக்கோடி தமிழர்கள் இசையில் மிகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே தமிழிசையே தரணியில் தோன்றிய முதல் இசை என்று துணிவுடன் கூறலாம்.
பழந்தமிழ்ப் பண்களின் எண்ணிக்கை 11,191.
திருவிளையாடற் புராணத்தில் இசைவாது வென்ற படலத்தில் தமிழிசையின் முழு வீச்சைக் காணலாம். ஈழ நாட்டு பாடினிக்கும் பாண பத்திரன் மனைவியாகிய விறலிக்கும் இடையே நடந்த போட்டியில் தமிழிசை தெய்வ இசையே என்று உறுதிப்படுகின்றது.
• குறிஞ்சிப்பண் மழைக்குரியது.
• விடிகாலைக்கு மருதப்பண், மாலைக்குச் செவ்வழிப் பண் (நடுநிசிக்கு யாம யாழ்) என பொழுதிற்கு ஒரு பண்ணை நாம் பார்க்கலாம்.
• வழிப்பறி கள்வர்களை மயங்கச் செய்வது பாலைப்பண்.
• வீர மரணமடைந்தவர்க்கு விளரிப்பண் (இரங்கற்பா)
• பிள்ளை பெற்ற தாய்மார்க்கு உடல் உரமிட செவ்வழிப் பண்
• தரணிமிசை தோன்றிய முதலிசை தமிழிசையே என்பதை குழல், யாழ், முழவு என்ற அடிப்படை சான்றுகளால் உணரலாம்.
• இசையை 8 வகையாகப் பண்ணிப் பாடுவதால் பண் என்றாயிற்று.
• ஐந்தொகை பெயர் மாற்றப்பட்டு பஞ்ச மரபாயிற்று.
• சரிகமபதநி – இவை தமிழிசைக் குறியீடே என்று பழைய நூல்கள் விளம்புகின்றன. சாரங்க தேவர் 12-ஆம் நூற்றாண்டின் செய்த மொழி மாற்றம், மூலமாற்றம் பெரும் புரட்டு எனலாம்.
• இசை என்பது ஒலியுடன் மட்டும் தொடர்புடையதன்று. ஐம்பூதங்களோடு தொடர்புடையது என்று பஞ்சமரபு ஆய்ந்துரைக்கின்றது. தமிழிசை இலக்கணம் பஞ்ச மரபு என்றால் தேவார திருமுறைகள், தமிழிசை இலக்கியங்களாக இன்றும் வலம் வருபவை. இவை பழந்தமிழ்ப் பண்களுக்கு உயிர் கொடுத்தவை ஆகும்.
கருநாடகச் சங்கீதம் என்ற சொல்லாட்சியே 18ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் ஏற்பட்டது.
ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் ஈப்ரு மொழிப் பேராசிரியராகிய டேவிட் சல்மான் தமிழ் வரலாறு என்ற நூல் எழுதியிருக்கிறார்.தமிழே இசை வடிவானது என்று எழுதி ஆலாபனம் ,பல்லவி ,அனுபல்லவி ,சரணம் ,ராகமாலிகா என்று தலைப்புக்கள் இட்டிருக்கிறார் .எனவே இசை வடிவத்திலேயே வெளிநாட்டவரும் தமிழ் மொழியை கண்டு மகிழும் வாய்ப்பு அமைந்திருக்கிறது .
சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் வருகின்ற பாணர்களின் ஆற்றுப்படை இசைக்கலைஞரின் வழிகாட்டும் இலக்கியமாகும்.தமிழில் தேர்ந்து ,தெளிந்து ,பிழிந்த சொற்கள் என்று மூன்று சொற்களை சொல்லுங்கள் என்றால் அறம் ,இசை ,சால்பு என்ற மூன்றைத்தான் சொல்லவேண்டும்.இசையென்றால் புகழ்,ஒன்றுகூடுவது ,புகழ்பேசுவது என்றெல்லாம் பொருள்படும்.இசையோடு வாழ்க ,வசையோடு வாழாதீர்கள் என்று நமக்கு திருக்குறள் வலியுறுத்துகிறது.
சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு மணி வந்தால் பிள்ளைகளும் பெரியோர்களும் ,தாய்மார்களும் தொலைபேசியும் ,தொலைகாட்சியாக ஒட்டிக்கொள்கிறார்கள் ஈடில்லா இசைவாணர் என்ற நிகழ்ச்சிதான் இன்று தமிழ் இசையை தமிழ் நாட்டிலும், உலகெங்கிலும் பரப்பி வருவதை நாம் காண்கிறோம்.
வெல்க தமிழ் இசை.
வாழ்க பெரியண்ணன்.

Add a Comment