நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்
====================================================
(வாழ்த்து – 186)
அன்புள்ள ஆசிரியருக்கு…
எழுத்துலகம் மேம்பட
—————————
“உலகம் போற்றும் பிரெஞ்சு அகாதெமி” துணைக் கட்டுரை படித்தேன். பிரெஞ்சு அகாதெமியின் செயல்பாடுகள் காரணமாகவே இந்தியாவில் சாகித்ய அகாதெமி, லலித் கலா அகாதெமி ஆகியவை உருவாயின. வருவாயை ஈட்டும் நிறுவனமாக இல்லாமல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் மூலம் பரிசுகளும் கல்விச் சலுகைகளும் பெற்று சிறப்பாகச் செயல்படுவதுதான் உலகம் போற்றும் வகையில் பிரெஞ்சு அகாதெமி இருக்கிறது. அதே போன்று சாகித்ய அகாதெமியைச் செயல்பட வைத்தால் எழுத்துலகம் மேன்மை பெறும். எழுத்தாளர்களுக்கு உரிய கௌரவம் சமுதாயத்தில் மேன்மை அடையும்.
—– சீ.காந்திமதிநாதன்,
கோவில்பட்டி.

Add a Comment