புதுவைக் கோமான் வரலாறு முடிந்ததே !
==========================================
புதுவையை நினைக்கும்போதெல்லாம் பாரதியாரையும் பாவேந்தரையும் நினைக்காமல் அந்த மண்ணில் கால் வைக்க முடியாது.
அந்த வகையில், இலக்கியக் கோமானாகவும், செல்வப் பெருந்தகையாகவும் பெருமிதத்தோடு வாழ்ந்த கோவிந்தசாமி முதலியார் மறைவு, புதுவையை கலையிழக்கச் செய்யும்.
அப்பா என்றுதான் நான் வாய் மணக்க கூப்பிடுவேன். வாய் திறந்தால், கம்பர் பாடலையும், பாவேந்தர் விருத்தங்களையும் சொல்லிச் சொல்லி மகிழ்வார்.
குறையே இல்லாமல் நிறைவாக வாழ்ந்த பெருந்தகை, நூறாண்டைத் தொட்டுவிட்டார் என்று இலக்கிய உலகம் தலை நிமிர்ந்து நின்றது.
முதலியார் அப்பா மறைந்ததை நினைத்து விம்மி விம்மி புலம்புகிறேன்.
எல்லாச் செல்வங்களையும் அளித்துவிட்டு ஏழெட்டு நூல்கள் இருந்தால் போதும் என்று தன் அறையை அறிவரங்கமாக மாற்றிக் கொண்டு, தமிழ் முதலியாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்.
எவருக்கும் எள்ளளவும் இடர் தராத அண்ணலின் பிரிவு இந்த உலகின் நிலையாமையைக் காட்டுகிறது.
நந்தா விளக்கணைய நாயகனாக வந்தார் வாழ்ந்தார் முடிந்தார்.
—– முனைவர் ஔவை நடராசன்

Add a Comment