ஓடிய நதி கடலில் கலந்தது !
=================================
கவியரசர் ஆலந்தூரார் மறைந்த செய்தி கலக்கத்தைத் தருகிறது .
நானும் அவரும் ஐம்பதாண்டுகளாகப் பழகியவர்கள் .
நூலாசிரியராக – பதிப்பாசிரியராக வாழ்க்கையை அலுத்துக்கொள்ளாமல் தாங்கிக் கொள்ளும் தனிப்பெருமிதம் தலைநிமிர்ந்து நின்றது .
நோயின் முன்னாலும் – முதுமையின் பின்னாலும் – எவ்வளவு தான் ஓடினாலும் ஒருநாள் தோற்று விடுவோம் போலத் தெரிகிறது .
அரிய நூல்களை ஆராய்ந்து வெளியிட்டதோடு , தலைச்சுமையாக வைத்துகொன்டு தமிழகம் முழுவதும் விழாக்களுக்குச் சென்று வந்தார் .
அலைபுரளக் – கரைபுரள – ஆறாய் ஓடி நிறைவாக நெடுங்கடலில் சேர்ந்துவிட்டார்.
ஓய்வில்லாத கால்கள் – உறுதி குலையாத நெஞ்சும் கொண்ட – ஆலந்தூரார் புகழையும் கொள்கைகளையும் அவர் குடும்பத்தார் சிறப்பாகத் தொடர்வார்கள் .
….. முனைவர் ஒளவை நடராசன்

Add a Comment