POST: 2019-10-22T07:50:43+05:30

===============================================
தினசெய்தி நாளிதழில் (21.10.2019) அன்று வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
===============================================

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் !

(பகுதி-5)

வானம்கூட உங்களுக்குத் தொடும் தூரம்தான்…!
*****************************************

பொன்மனச் செம்மலுடனான நினைவலைகளில், ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி… புகழ்ப் பெற்ற விண்வெளி வீரர்கள் ராகேஷ்சர்மா மற்றும் ரவி மல்ஹோத்ரா, சென்னைக்கு வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று விருந்தளித்தார் முதலமைச்சர் எம்ஜிஆர். அவருக்கு என்ன தோன்றியதென்று தெரியவில்லை. திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வனப்பான, பொன்னிழை இட்ட அட்டையிட்டு, பரிசாக வழங்க வேண்டும் என்று விரும்பினார். உடனே ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை, அவ்வாறு தயார் செய்தோம்.

அந்த விருந்து நடைபெறும் ஐந்து மணி நேரங்களுக்கு முன்னால், என் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது ‘விருந்து நடைபெறும் இடத்தில், ஒரு திருக்குறளை எழுதிவைக் வேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். உடனடியாக ஒரு குறள் சொல்லவேண்டும். நாங்கள் எழுத, ஏற்பாடு செய்கிறோம் என்று கேட்டார்கள். திடீரென்று கேட்டால், எனக்கு நினைவு வருவதில்லை. அதோடு, அன்று ஏதோ அலுவல் காரணமாக அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏதாவது ஒரு குறள் சொல்ல வேண்டும் என்கிற பதைப்பு.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. (353)

என்ற குறளை சொன்னேன். அதை எழுதிவிடுங்கள் என்றேன். இந்த நிகழ்ச்சிக்கும் குறளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டார் ஒரு செயலாளர். வையம் இருக்கிறது, வானம் இருக்கிறது. இவர்கள் விண்வெளி வீரர்கள் தானே என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். நீங்கள் சொல்கிறீர்கள், சரி என்று பதில் சொன்னார் செயலாளர்.

நம்ப மாட்டீர்கள்! ஏழெட்டு மணி இருக்கும். விருந்து நிகழ்ச்சிக்கு என்னை வரச்சொல்லி, முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் போயிருந்தேன். விருந்து முடிந்தபிறகு என்னைக் கூப்பிட்டார் முதலமைச்சர். அந்த குறளுக்கு ஆங்கிலத்தில் பொருள் சொல்லுங்கள் என்றார்.

எந்த விதமான ஐயமும் இல்லாமல், விழிப்போடும் தெளிவோடும், எல்லாக் கணக்குகளும் தீர்வாகி விட்டன என்ற தெளிவு நிலையில், நீங்கள் முற்படுவீர்களானால், வானம் கூட உங்களுக்குத் தொடும் தூரம்தான் என்று ஆங்கிலத்தில் சொன்னேன். திரும்பச் சொல்லுங்கள் என்று அந்த விண்வெளி வீரர்கள் கேட்டார்கள். என் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் எந்த மேத்தமெட்டிஷியனை(Mathematician) கோட்(Quote) பண்ணுகிறீர்கள் என்று ܂நான் ‘கணக்கறிஞன் இல்லை. தமிழகத்தில் அறிவுப் பரொளியாகத் திகழ்கிற திருக்குறளில் இருந்து, இதனைச் சொன்னேன். அந்த நூல்தான், உங்களுக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கிறதும்’ என்றேன்.

நாங்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும்முன்பு, கருத்தைத்தான் சொன்னார்கள் என்று அந்த விண்வெளி வீரர்கள், அருகில் இருந்த முதலமைச்சர் எம்ஜிஆரிடம் கூறினர்.

எந்த விதமான ஐயமும் இல்லாமல், விழிப்போடும் தெளிவோடும், எல்லாக் கணக்குகளும் தீர்வாகி விட்டன என்ற தெளிவு நிலையில், நீங்கள் முற்படுவீர்களானால், வானம் கூட உங்களுக்குத் தொடும் தூரம்தான் என்று ஆங்கிலத்தில் சொன்னேன். திரும்பச் சொல்லுங்கள் என்று அந்த விண்வெளி வீரர்கள் கேட்டார்கள். என் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் எந்த மேத்தமெட்டிஷியனை(Mathematician) கோட்(Quote) பண்ணுகிறீர்கள் என்று ܂நான் ‘கணக்கறிஞன் இல்லை. தமிழகத்தில் அறிவுப் பரொளியாகத் திகழ்கிற திருக்குறளில் இருந்து, இதனைச் சொன்னேன். அந்த நூல்தான், உங்களுக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கிறதும்’ என்றேன்.

நாங்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும்முன்பு, கருத்தைத்தான் சொன்னார்கள் என்று அந்த விண்வெளி வீரர்கள், அருகில் இருந்த முதலமைச்சர் எம்ஜிஆரிடம் கூறினர்.

சிலநேரங்களில் திருக்குறள் உருக்கம் அல்லது இலக்கியக் காட்சிகளைக் கேட்கிறபோது ஒரு பரிவு, எம்ஜிஆரிடத்தில் வரும். அந்த அடிப்படையில், நான் சொன்னதன் விளைவாக, திருக்குறள் நெறிபரப்பு இயக்கம் என்ற அமைப்பை, வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கினார் முதலமைச்சர் எம்ஜிஆர். திருக்குறளாரை அதற்குத் தலைவராக அமர்த்தினார் அவர்.

சில ஆண்டுகள் கழித்து, அவரே அதை எடுத்து விட வேண்டும் என்று சொன்னதெல்லாம் வேறு எது என்றாலும், திருக்குறளைப் பற்றி வருகிறபோது, இந்தக் கருத்து மனதில் வந்தது.

இன்னும் ஒரு கருத்து சொல்ல வேண்டும். அரசுப்பணியில் எப்படி இருக்கிறோம் என்பதற்கு ஒரு சான்று. மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்குரிய நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துக் கொண்டிருந்தோம். தனித்தமிழ்ப் பெருவீரராகத் திகழ்ந்த பாவலரேறுவை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தேவநேயப்பாவாணர் தலைமையில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பெருமகிழ்ச்சியில் இருந்தார் பாவாணர்.

அண்ணா! உங்களுக்குத் தெரியாதா? தென்மொழி ஆசிரியர். தனித்தமிழ் ஆற்றல் வாய்ந்தவர். பேராசிரியர்களை விடப்பெரும் புலமைத் தகுதியோடு தன் கருத்துக்களை எடுத்துரைப்பவர் என்றேன் நான்.

எனக்கு அதெல்லாம் தெரியும். ஆனால், நீங்கள் அவரை எப்படி அழைக்கலாம் என்றார் முதலமைச்சர். தன்னுடைய சட்டைப்பையில் இருந்து, ஒரு தொலைவழிச் செய்தியைக் காட்டினார். பாலவரேறு பேரைச் சேர்க்க வேண்டும். சேர்த்து விட்டீர்களா? என்று என்னிடம் பலமுறை வலியுறுத்திய அந்நாளைய தலைமைச் செயலாளர் திரு.திரவியம், அமைச்சர் காளிமுத்து ஆகியோர், அப்போது வாய் திறக்காமல் இருந்தார்கள்.

எனக்கு அதெல்லாம் தெரியும். ஆனால், நீங்கள் அவரை எப்படி அழைக்கலாம் என்றார் முதலமைச்சர். தன்னுடைய சட்டைப்பையில் இருந்து, ஒரு தொலைவழிச் செய்தியைக் காட்டினார். பாலவரேறு பேரைச் சேர்க்க வேண்டும். சேர்த்து விட்டீர்களா? என்று என்னிடம் பலமுறை வலியுறுத்திய அந்நாளைய தலைமைச் செயலாளர் திரு.திரவியம், அமைச்சர் காளிமுத்து ஆகியோர், அப்போது வாய் திறக்காமல் இருந்தார்கள்.

நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் எந்த அளவுக்கு அச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. மறுநாள், மாநாட்டு அரங்கத்தில் இருந்தேன் நான். நாள் தவறாமல் வந்து, விழாக்களில் கலந்து கொள்வார் முதலமைச்சர். அப்போது முதலமைச்சரோடு ஏற்பட்ட நெருக்கத்தினால்தான் நான் பின்னர் அரசு செயலாளராக முடிந்தது என்று பலர் நினைத்தார்கள்.

பாவலரேறு எங்கே? அவர் ஏன் வரவில்லை? என்று மாநாட்டில் துண்டுத்தாள்களைத் தந்தார்கள் நண்பர்கள் சிலர்.

அரங்கத்திற்கு வெளியே வந்த முதலமைச்சர், தனக்கேயுரிய வகையில் என்னைப் பார்த்துச் சொன்னார். நீங்களும் அவர் வராமல் தடுத்தீர்கள்? நானும் தடுத்து விட்டேன் என்று சொல்லி, என் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

எனக்கு விளங்கவில்லை. அது என்ன? நாம் என்ன தடுத்தோம்? இவர் என்ன தடுத்து விட்டார்? என்று எண்ணிக் கொண்டே போனேன். பல திங்கள் கழித்து, எனக்குத் தெரிந்தது. அமைச்சர் காளிமுத்து, அந்த மாநாட்டுக்கு முன்பு என்னிடம் தனியாகச் சொன்னார். பாவலரேறுவைப் பார்த்து மாநாட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் வராமல் நின்றுவிடுவார் என்றார்.

நானும் போய்ச் சொன்னேன். இது நையாண்டி அரசு என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பாவலரேறு. பிறகுதான் தெரிந்தது. இவர்கள் என்ன தடுத்து நிறுத்துவது? நீங்கள் சென்றே தீர வேண்டும் என்று அவரிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அவர் புறப்பட முற்பட்ட போது, தொடர்வண்டி ஏறுவதற்கு முன்பு, காவல்துறை அவரைத் தடுத்துவிட்டது.

ஒருவேளை மாநாட்டினர் தடுப்பதில் சிக்கல் வருமோ என்று எண்ணிய முதல்வர், தானே காவல்துறையிடம் சொல்லித் தடுத்துவிட்டார் என்று பிறகு நினைக்க முடிந்தது. இதுபோன்ற பல நுணுக்கங்கள், அவரிடம் இருந்தன.

உலகத் தமிழ்ச்சங்க விழா மதுரையில் வெற்றியோடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் காலை எட்டரை மணிக்கு, என்னை அழைத்தார் எம்ஜிஆர். அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், அவர் தலையில் வழக்கமாக அணியும் குல்லாவை அணிந்திருக்கவில்லை. அந்தக் காட்சியில் அவரைப் பார்த்தவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள்.

என்னிடத்தில் எம்ஜிஆர் சொன்னார். இது உலகத் தமிழ்ச்சங்க விழா. அதனால் உலகத் தமிழர்களுக்கு உழைத்தவர்கள் என்ற வகையில், ஒருவர் பெயரைக் குறித்து, நான் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை தந்துவிடுவதாக அப்போது அறிவிக்கலாமா? என்று கேட்டார்.

முதல்வர் அவ்வாறு அறிவிக்கலாம். ஆனால் அயல்நாட்டில் வாழ்கின்ற ஒரு தலைவருக்கு, அவ்வாறு வழங்குவதற்கு விதி இடம் தருமா? என்று தெரியவில்லை. நீங்கள்தான் அதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னேன் நான் மைய அரசிடம் வினவத்தான் வேண்டும் என்றார்.

என் மனம் அப்படிச் சொல்கிறது என்று சொன்னார். பாருங்கள்! மீண்டும் அதைப்பற்றி, என்னிடம் அவர் பேசவில்லை. பின்னர், அதைப் பற்றிய அறிவிப்பும் வரவில்லை. அவருடைய மனம் பொங்கியது. உடனே என்னிடம் கூறிவிட்டார். அவ்வளவுதான்!

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் நினைவுகளை…..

///// ஔவை நடராசன்
தொடர்புக்கு thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *